விடுதலை சிறுத்தைகள் போட்டியிட தென் மாவட்டங்களிலும் தொகுதிகள் கேட்டுள்ளோம் திருமாவளவன் தகவல்

காரியாபட்டி,பிப்.25-

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட தென் மாவட்டங்களில் தொகுதிகள் கேட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமண விழா

விருதுநகர் மாவட்ட முற்போக்கு மாணவர் கழக செயலாளரும், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலருமான இனியவன்-முனீஸ்வரி ஆகியோரது திருமணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி நடத்திவைத் தார். அப்போது அவர் பேசிய தாவது:-

ஒரு கட்சியின் கட்டுப்பாட்டை மதிப்பது, அந்த கட்சியின் தலைமை கோட்பாடு மற்றும் கொள்கைகளை மதிப்பது போன்ற மனப்பக்குவத்தை தொண்டர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பா.ம.க.

பா.ம.க. நிறுவனர் தலைவர் ராமதாஸ் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும், அக் கட்சியின் தொண்டர்கள் தலைவரின் ஆணையை மதித்து செயல்படுகிறார்கள். இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க. 31 தொகுதிகளை பெற்று உள்ளது. அது அக்கட்சிக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரமாகும்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தலித் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு சிதறிக் கிடந்த தலித் சமுதாயத்தை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் அங்கீகாரத்தைபெற்றுத் தருவதில் விடுதலைசிறுத்தைகள் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தலித் சமுதாயம் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.

தென்மாவட்ட தொகுதிகள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இணைந்து கருணாநிதியை மீண்டும் முதல்-அமைச்சர் பதவியில் அமர வைக்க பாடுபடுவோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும். குறிப்பாக, தென் மாவட்டங்களில் போட்டியிடு வதற்கான தொகுதிகளை கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

நன்றி : தினத்தந்தி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக