புதுவை : தி.மு.க கூட்டணியில் : வி.சி.க விற்கு நெடுஞ்காடு (தனி) தொகுதி

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், திமுக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பேச்சுவார்த்தை இழுபறி ஏற்பட்ட நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டியிடுவதாக தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு 2 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

நெடுஞ்காடு (தனி) தொகுதி சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திரு. அரசு வணங்காமுடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக