ஈழத் தமிழருக்கு தனி நாடு கோரி தீக்குளித்து உயிர்நீத்த கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்
ஈழத் தமிழருக்கு தனி நாடு கோரி கடந்த 18-4-2011 அன்று தீக்குளித்து உயிர் நீத்த பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா, குருவிக்குளம் ஒன்றியம், சீகம்பட்டி கிராமத்தில் அவரது உருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தில்லியில் இருப்பதால் அவரது ஆணையின்படி கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் வன்னிஅரசு, கரும்புலி முத்துக்குமார் பாசறையின் மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன், மதுரை மாவட்டசெயலாளர் எல்லாளன், ஊடகப்பிரிவின் மாநில துணைச்செயலாளர் அகரன், நெல்லை மாவட்டசெயலாளர் கார்த்திக் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக