ஈஸ்டர் திருநாள்! தொல்.திருமாவளவன் வாழ்த்து!
அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வைப் பெற அன்பும் கருணையும்தான் அடிப்படையானவை. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும் ஒருவர் மீது ஒருவர் கருணை செய்வதும் மன அமைதியையும் மானுட இன்பத்தையும் நுகர்வதற்கு வழிவகுக்கும். அத்தகைய அறநெறி வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழ்ந்துகாட்ட வேண்டுமென்பதற்கு வழிகாட்டியாக தன் வாழ்வை ஒப்படைத்துக்கொண்டு சிலுவையைச் சுமந்தவர் இயேசுபிரான்.
பிறருக்காக எத்தகைய துன்பத்தையும் இன்முகத்துடன் ஏற்க வேண்டுமென்கிற வாழ்க்கைத் தத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துகிறார். மற்றவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக, ஒருவன் சுமக்கும் துன்பம் பேரின்பத்தை அளிக்கும் என்ற வாழ்வியல் உண்மையை உலகுக்குச் சொன்ன மகான் இயேசுபெருமான் உயிர்த்தெழுந்த இந்நாளில் அன்பு வழியில் அறவழியில் உலகம் அமைதியைப் பெற அனைவரும் உறுதியேற்போம்.
உலகம் முழுவதும் ஈஸ்டர் நாளைக் கொண்டாடும் இந்நாளில் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

.
இவண்
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக