போட்டி வேட்புமனுத் தாக்கல் செய்தோர் கட்சியிலிருந்து நீக்கம்! தொல்.திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை



நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியாற்றுவதுதான் கூட்டணி அறமாகும். ஆனால், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு சிலர் ஒரு சில தொகுதிகளில் போட்டி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறு தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒரு சிலர் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

ஆனால், ஒரு சிலர் அவ்வாறு போட்டி வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. அவ்வாறு திரும்பப் பெறாமல் வேட்பாளர்களாகப் போட்டியிடும்

1) விருத்தாசலம் மருத்துவர் சுலோசனா என்ற சுடர்மதி அய்யாச்சாமி,

2) இராஜன் என்கிற குடந்தை அரசன், 3) சீர்காழி குமாரராஜா,

4) காட்டுமன்னார் கோவில் டாக்டர் நந்தகுமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகின்றனர். அவர்களுடன் கட்சியினர் தேர்தல் வேலை செய்யவோ, எந்தவித அரசியல் தொடர்புகள் வைத்துக்கொள்ளவோ கூடாதென அறிவுறுத்தப்படுகின்றனர்..

இவண்


(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக