மே நாள் வாழ்த்து!
தொழிலாளர் தோழர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மே நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கானோர் அதில் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்த நிலையை முதல்வர் கலைஞர் அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார். இப்படி ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற வழிவகுத்த தலைவர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் உளமாரப் பாராட்டுகிறது. அதேவேளையில் இவ்வாறு தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் பெரும்பாலானவற்றில் தொழிற்சங்க உரிமைகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிற சூழல் உள்ளது. அது சரிசெய்யப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு சுருங்கிப் போய்விட்ட நிலையில் தனியார் நிறுவனங்களே இப்போது பெரும்பாலான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் சமூகநீதிக் கொள்கைக்கு மாறான விதத்திலேயே செயல்பட்டு வருகின்றன. இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற முடியும். எனவே தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை மே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பரந்துபட்ட பிரச்சாரம் இயக்கம் ஒன்றை கருத்தொற்றுமை உள்ளவர்களோடு இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுக்கும் என்பதை இந்த மேநாளில் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொழிலாளத் தோழர்களே ஒன்றுபடுங்கள்!
வர்க்கமாய்த் திரள சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபடுங்கள்!
இவண்
(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக