புதுவையில் தொல்.திருமா 10 வது நாளாக கையொப்பம் இயக்கம் :


10 வது நாளாக கையொப்பம் இயக்கம் 26.7.11 இன்று காலை 10.30 மணியளவில் புதுச்சேரி நேரு வீதி அண்ணா சாலை சந்திப்பில் காமராஜர் சிலை அருகில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கையொப்ப இயக்கம் நடத்துவதற்கான காரணங்களை விளக்கி உரையாற்றினார். 

சிங்கள இனவெறியன் ராஜபக்சே தலைமையிலான போர் குற்றவாளிகளை அனைவரையும் அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டுமென ஜூலை 12 தேதியில்இருந்து இந்த கையொப்ப இயக்கம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.அந்த வகையில் இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது என்றும் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். 

அத்துடன் ராஜபக்சே கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும் அதற்கு தமிழர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் .இலங்கையில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் விடுதலை புலிகளின் நல் ஆதரவுவைப்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மாபெரும் வெற்றியை அங்கு உள்ள ஈழத்தமிழர்கள்வழங்கியுள்ளனர்.

மேலும் முன்னால் அதிபர் சந்திரிக்கா, ராஜபக்சே அரசு சர்வாதிகார அரசாக செயல்பட்டுவருகிறது என்றும் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை  பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் ராஜபக்சேவுக்கு எச்சரிக்கை விடுத்து  இருக்கிறார்.அவருடைய குரல் தமிழீழத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது .அதேபோல அமெரிக்க நாடாளுமன்ற குழு சிங்கள அரசுக்கு அளித்து வந்த நிதியுதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முடிவு செய்துள்ளனர்.இதுவும் துவண்டு கிடக்கும் தமிழ் இனத்திற்கு தெம்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.இந்நிலையில் ஒட்டுமொத்த  தமிழர்களும், ஒருங்கிணைந்து அனைத்துலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டியது மிகவும் இன்றியமையாததாகவும் என்று பேசினார்.

அதனை தொடர்ந்து பொது மக்களிடம் கையொப்பங்களை பெற்றார்.புதுச்சேரி அமைப்பு செயலாளர் பாவணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .விடுதலைச் சிறுத்தைகள் கொடிகளையும் ,ராஜபக்சேக்கு கைவிலங்குகளை மாட்டி இருப்பதை போன்ற படம் பொறித்த பதாககளையும் கட்சி பொறுப்பாளர்கள் ஏந்தியவாறு பொது மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.அவ்வழியில் சென்ற பொதுமக்கள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்று கையொப்பம் இட்டனர்.சுமார் 1 மணி நேரம் மேலாக  இந்த கையொப்ப இயக்கம் நடைபெற்றது.பொதுமக்கள் கூடியதால் நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.எராளமான காவல் துறையினர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர் இந்நிகழ்வில் கட்சி பொது செயலாளர் து.ரவிக்குமார், கவிஞர் தலையாரி, பொதினிவலவன், தமிழ்மாறன், அமுதன், ஜெய்சிங் மற்றும் எராளமான  முன்னணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கையொப்பம் இட்ட பொதும்மக்கள் ராஜபக்சே கண்டிப்பாக தண்டிக்கபடுவான் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்களிடம் கூறியவாறு கையொப்பம் இட்டனர்,கையெழுத்து மட்டுமே போடதெரிந்த பலர் பங்கேற்று தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினர்.கையெழுத்து போடா தெரியாத பாட்டி ஒருவர் தான் கைநாட்டு வைப்பதாக கூறினார்.அவருடைய இன உணர்வு பார்த்தவர்களை நெகிழவைத்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக