சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் : கையெழுத்து இயக்கம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் 25.7.11, அன்று 12 மணியளவில் எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்கள் கையொப்ப இயக்கத்தை மேற்கொண்டார்.
பல்கலை கழகத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திரண்டு இருந்த பல்கலை கழக மாணவர்கள்,பணியாளர்கள்,மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இடையே சுமார் 30 நிமிடம் கையொப்ப இயக்கத்தை நடத்துவதற்கான காரணத்தை விளக்கி தொல்.திருமா அவர்கள் உரையாற்றினார்.
அமெரிக்க,ஐக்கிய நாடுகள்,ஐரோப்பிய நாடுகள் இனபடுகொலை குற்றவாளி ராஜபக்சேக்கு எதிரான காய்களை நகர்த்திக்கொண்டு இருக்கிற வேளையில் தமிழக தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் ஒருங்கிணைத்து அனைத்துலக சமூகத்தின் ஆதரவை திரட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்நிலையில் ருத்துரகுமார் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கிற வகையில் இந்த கையொப்ப இயக்கத்தை விடுதலைச்சிறுத்தைகள் மேற்கொள்கிறது எனவே அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்கள் கேட்டுக்கொண்டார்
அதனை தொடர்ந்து அங்கு திரண்டவர்களிடம் கையொப்பம் பெற்றார்.நுற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று கையொப்பங்களை இட்டனர்.ராஜபக்சேவை தூக்கில் இடும் வரையில் ஓயக்கூடாது என கையொப்பம் இட்ட மாணவர்கள் ஒரு சிலர் தொல்.திருமா அவர்களிடம் தங்கள் உணர்வுகளை வெளிபடுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக