15ஆம் நாளாகக் கையயாப்ப இயக்கம் மெரினா கடற்கரையில் பொதுமக்களிடம் தொல். திருமாவளவன் கையயாப்பம் பெற்றார்!
31.07.2011 இரவு 8 மணியளவில் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே தொல். திருமாவளவன் கையயாப்ப இயக்கத்தை மேற்கொண்டார். கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்களிடத்தில் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் அட்டைகளையும் பிடித்தவாறு விடுதலைச் சிறுத்தைகள் பரப்புரை செய்தனர். அவர்களுடன் நடந்து சென்று பொதுமக்களை ஒவ்வொருவராகச் சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி தொல். திருமாவளவன் கையயாப்பங்களைப் பெற்றார்.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி வடஇந்தியர்களும் வெளிநாடுகளைச் சார்ந்தவர்களும் என்ன, ஏது என்று விளக்கமாகக் கேட்டு அவர்களாக முன்வந்து அவரவர் தாய்மொழியில் கையயாப்பமிட்டனர். வெளிநாடுகளிலிருந்து வருகைதந்திருக்கிற ஈழத் தமிழர்களும் விடுதலைச் சிறுத்தைகளின் பணிகளைப் பாராட்டியவாறு நன்றிப் பெருக்குடன் கையயாப்பமிட்டனர். கல்லூரி மாணவர்கள், மாணவியர் மிகுந்த ஆர்வத்தோடு கையயாப்பமிட்டதுடன் ஈழத் தமிழர்களுக்காக இன்னும் தீவிரமாகப் போராட வேண்டும் என்றெல்லாம் கருத்துகளைக் கூறினர். கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் ""நாங்களும் கையயாப்பமிடுகிறோம்!'' என்று சொல்லி வரிசையாக நின்று கையயாப்பமிட்டனர்.
""எதற்காகக் கையயாப்பம் வாங்குகிறீர்கள்?'' என்று கேட்ட இளம்பெண் ஒருவர், ""உண்மையிலேயே இராஜபக்சேவை உங்களால் தண்டிக்க முடியுமா?'' என்று ஆதங்கத்துடன் கேட்டுவிட்டு, ""எப்படியாவது இராஜபக்சேவைத் தண்டியுங்கள்; உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்!'' என்று ஆங்கிலத்தில் கூறியவாறு கையயாப்பமிட்டார். கடற்கரையில் சுண்டல், வேர்க்கடலை, இளநீர் போன்றவற்றை விற்பனை செய்யும் எளிய மக்கள் பலரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கையயாப்பமிட்டனர். ""ஈழத் தமிழர்களை ஆதரிக்கிற அனைவரும் ஏன் ஒன்று சேர்ந்து போராடக் கூடாது?'' என்று ஒருவர் மிகுந்த ஆதங்கத்துடன் கேட்டுவிட்டுக் கையயாப்பமிட்டார். இன்னொரு இளைஞர் ""நேரடியாக ஒபாமாவுக்கும், பான்ŠகிŠமூனுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாமா? இலட்சக் கணக்கிலே தமிழர்கள் இப்படி மின்னஞ்சல் அனுப்பினால் நன்றாக இருக்குமே!'' என்று ஆலோசனை கூறியவாறு கையயாப்பமிட்டார்.
இந்தக் கையயாப்ப இயக்கம் வெகுமக்களிடையே ஈழ மக்களின் நிலைமை குறித்து தீவிர கருத்துப்பரப்பலை செய்வதற்காகவும்தான் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர்களிடத்தில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
இன்றைய கையயாப்ப இயக்க நடவடிக்கையில் தொல். திருமாவளவன் அவர்களுடன் இளஞ்சேகுவேரா, சங்கத்தமிழன், சேத்துப்பட்டு இளங்கோ, ரூதர் கார்த்திக், இளையவளவன், சைதை ஜேக்கப், பகலவன், சாரநாத், பி.டி. தமிழ்க்கதிர், யாழ்ப்பாணன், பாரிவளவன், சசி, ஆதன், முத்துப்பாண்டி அனைவரும் தனித்தனியாக படிவங்களில் பொதுமக்களிடம் கையயாப்பங்கள் பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக