ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்: “ஈழத் தமிழர் படுகொலையை டி.வி.யில் பார்த்து அழுதேன்”; நடிகை அஞ்சலி


ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக் காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
 
 
நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்ணன், சீனு, நடிகை ரோஜா டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், வேலு பிரபாகரன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் ஏற்கனவே கையெழுத்திட்டனர்.
 
தற்போது நடிகை அஞ்சலியும் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் இயக்க செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, நிர்வாகிகள் சங்கத்தமிழன், எழில் இமயன், விடுதலைச் செல்வன், இரா.செந்தில் ஆகியோர் நேரில் சென்று கையெழுத்து வாங்கினர். இயக்குனர் மு.களஞ்சியத்திடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.
 
கையெழுத்திட்டது பற்றி நடிகை அஞ்சலி மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
 
இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு சண்டை நடந்த போது இந்த செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். ஆனால் சமீபத்தில் டி.வி.யில் நேரடியாகவே அந்த படுகொலைகளை பார்த்து அதிர்ச்சியானேன். பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களை சுட்டு போட்டு இருந்தனர். ஒரே பிணங்களாக இருந்தது. அதை பார்த்து அழுது விட்டேன்.
 
ஈழத் தமிழ் இனத்தை இப்படி கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்க விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி : மாலைமலர் 03.08.2011

1 கருத்துகள்:

இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!
மானங்கெட்ட சிங்கு நாயே இப்படி சொல்ல உனக்கு வெட்கமாயில்ல.
இந்தியாவும் இலங்கையும் குலாவிகொள்ள தமிழர்கள் என்ன பலிஆடா,
டேய் தமிழ் நாய்களா இன்னமும் நிங்கள் இந்தியானு கூவிகிட்டுயிருந்தா கடைசியில் ஒரு தமிழன்கூட மிஞ்சமாட்டிங்க, இராசபக்சே தண்டிக்கபடவேண்டும் அதில் மாற்று கருத்துயில்லை ஆனால் அதே அளவுக்கு இந்திய நடுவன அரசியல்வாதிகளும் தண்டிக்கபட வேண்டும்.
தமிழர்கள்தான் தன்னை இந்தியர்கள் என்று சொல்லுகிறார்களே தவிர இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பார்க்கவில்லை ஏன் மனிதர்களாய்கூட பார்க்கவில்லை, இன்னமும் நாம் பொருத்துகொண்டிருந்தால் நாம் மண்ணாய் போய்விடுவோம் .
இப்படி ஒருதலைபட்சமாக நடக்கும்
இந்திய விடுதலை நாளை புறக்கணிப்போம்,
இந்திய தேச தலைவர்களின் சிலைகள் உடைக்கபட வேண்டும்,
இந்திய கொடியை எறிப்போம்.

3 ஆகஸ்ட், 2011 அன்று 1:49 PM comment-delete

கருத்துரையிடுக