கோயம்பேட்டில் தொழிலாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறை விடுதலைச்சிறுத்தைகள் முயற்சியில் அமைதி திரும்ப நடவடிக்கை
சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தையில் கடந்த 11.12.2011அன்று அதிகாலை 4மணியளவில் சுமைத் தூக்கும் தொழிலாளி ஒருவர் லாரியில் அடிபட்டு காயமடைந்தார், இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்து போக்குவரத்தை தடைசெய்தனர். இதனால் காவல்துறையினர் வந்து சமாதானம் செய்துவைக்க முயற்சி செய்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார் என்பதற்காக தொழிலாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவியது. காவல்துறை நடத்திய தாக்குதலில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததுடன் 40ம் மேற்பட்ட தொழிலாளிகள் காவல்துறை சிறைபடுத்தி உள்ளது. பல தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள் ளனர். அவர்கள் மீதும் காவல்துறை பல வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்கும்படி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியதின் பேரில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கோயம்பேட்டிற்கு சென்றனர். அதில் கருத்தியல் பரப்புச் செயலாளர் கவுதம சன்னா தலைமையில் தலைவரின் தனி செயலாளர் சேகுவேரா முன்னிலையில், வழக்கறிஞர் தேவ அருள் ப்ரகாஷ் மற்றும் பத்து வழக்கறிஞர்களுடன் விருகை பகுதி செயலாளர் மணி ஆகியோர் கோயம்பேட்டிற்கு சென்றனர்.
அங்கு முதலில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு சந்தையின் தக்காளி வியாபாரம் செய்யும் பகுதியின் சங்க நிர்வாகிகளையும் மற்றும் கோயம்பேட்டிலுள்ள பிற வியாபாரிகள் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் இரண்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
1.வரும் பதினாறாம் தேதி கோயம்பேட்டில் சந்தையிலுள்ள 33 வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஒன்றுகூடி தொழிலார்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்தும் தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற காவல்துறை வலியுறுத்தவும்.
2.சந்தையில் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாவண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். முத்தரப்பு அமைதி குழு அமைக்கப்படவும் முடிவெடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தைக்கு சென்ற குழுவின் கோரிக்கையை ஏற்று உறுதியளித்தனர்.
இதற்கு பிறகு அடுத்த கட்டமாக தொழிலாளர்கள் பிரதிநிதிகளை சந்தித்தது அப்போது தொழிலாளிகளின் பிரச்சனைகளையும் விரிவாக பேசிய பிறகு பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டன
1.பொய்வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து சுவரொட்டி இயக்கம் நடத்துவது மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது.
2.வியாபாரிகள் சங்க தீர்மானத்தின் படி அமைக்கப்படவுள்ள அமைதி குழுவில் பங்கேற்பதற்கு நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது .
3.சந்தையை நிர்வாகம் செய்யும் சி.எம்.டி.எ வின் மெத்தனப் போக்கை கண்டிப்பது.
4. தொழிலாளர் விடுதலை முன்னணி கோயம்பேடு சந்தை உறுப்பினர்களுக்கு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் உறுப்பினர் அட்டை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்களை செயல்படுத்துவதற்கு ஒரு மேற்பார்வை குழுவும் அமைக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது வழக்.வீரமுத்து, சூ.க.விடுதலைசெழியன், வனச் செழியன், செல்வராஜ், இரவி, கவுதம் உள்ளிட்ட ஏரளாமான விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட னர். இதற்கு இடையில் வழக்கறிஞர் அணியின் மாநில செயலாளர் எழில் கரோலின் தலைமையில் வீரமுத்து, பார்வேந்தன், மற்றும் தோழர்கள் மாநகர துணை ஆணையரை சந்தித்து பொய்வழக்குகள் போடுவதை தடுத்து நிறுத்தும் படி வலியுறுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக