முல்லை பெரியார் விவகாரம் : தேனியில் தலைவர் திருமா கைது !



தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முல்லை பெரியார் அணையை காக்கக் கோரியும், கேரளாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்தும் இன்று குமுளியை நோக்கி ஆயிரக்கணக்கான சிறுத்தைகள் காலை 10 மணிக்கு தேனியிலிருந்து நடைபயணம் மேற்கொண்டனர். 

பெரும் திரளான தொண்டர்களுடன், எழுச்சிமிகு முழகங்களுடன் திருமாவளவன் நடந்தார். 



4 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்ற நிலையில், போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி குமுளி செல்லக் கூடாது என்று கூறி கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக