காவல்நிலைய படுகொலைகளும் - தீர்வுகளும் ! அனைத்துலக மனித உரிமை நாள் கருத்தரங்கம்


அனைத்துலக மனித உரிமைகள் நாளான டிசம்பர் 10 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. காவல்நிலைய படுகொலைகளும் - தீர்வுகளும் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்குகிறார். இக்கருத்தரங்கில் மக்கள் கண்காணிப்பக தலைவர் ஹென்றி டிபன், பெர்னாண்டஸ், வழக்.சரவண வேல், கணேஷன், வழக்.சுதா ராமலிங்கம், கிருஷ்ணவேணி, பழனியம்மாள், இந்திரா ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர். இந்நிகழ்ச்சியை விடுலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் மற்றும் கருத்தியல் பரப்புச் செயலாளர் கவுதம சன்னா ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். இக்கருத்தரங்கு சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணிவரை நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக