சிதம்பரத்தில் வி.சிறுத்தை உண்ணாவிரதம்


முல்லை பெரியாறு பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத கேரள அரசு மீது நடவடிக்கை எடுக்காத இந்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். 



மாவட்ட செய்தி தொடர்பாளர் நெடுமாறன் முன்னிலை வகித்தார். ரத்தினசாமி வரவேற்றார். இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் பாலஅறவாழி, மாவட்ட துணை செயலாளர் கதிரவன், நகர மன்ற உறுப்பினர் திருவரசு, கல்வி பொருளாதார விழிப்புணர்வு அணி மாவட்ட செயலாளர் பொறியாளர் கலியபெருமாள், மாநில நிர்வாகிகள் நீதிவளவன், ஜவகர் மற்றும் அரசு, சபாநாயகம், ராஜாராமன், பாரதி, அதியமான் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ஏற்பாடுகளை கடலூர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர். 

பண்ருட்டியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கடலூர் நகர மன்ற முன்னாள் துணை தலைவர் தாமரைசெல்வம் தலைமையில், பண்ருட்டி நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக