பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்!
பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள்
நியமிக்கப்பட வேண்டும்!
உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு
வயது வரம்பைத் தளர்த்த வேண்டும்!
தொல்.திருமாவளவன் அறிக்கை!
தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆணையிட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் மனமார வரவேற்கிறது. தமிழகமெங்கிலும் ஏறத்தாழ 25,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கான படிப்பை முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். 50 வயதைக் கடந்த நிலையிலும் வேலைவாய்ப்பின்றி பெரும்பாலானோர் அல்லலுற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது தகுதித் தேர்வு, மற்றும் போட்டித் தேர்வு ஆகிய இரட்டைத் தேர்வு முறையின்படி பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதால் நீண்டகாலமாக காத்திருப்போருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் நிலை உருவாகும் என அவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதைப் போல தற்போதும் நியமனம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அதாவது இரட்டைத் தேர்வு முறையை கைவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையிலேயே, போட்டித் தேர்வின் மூலம் மட்டுமே அப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
அடுத்து, உரிமையியல் நீதிமன்றங்களில் 185 பணியிடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வுகள் நடத்திட தமிழக அரசு அறிவிப்புச் செய்துள்ளது. அவ்வறிவிப்பில் தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பொது வகையறா மாணவர்களுக்கு 35 ஆண்டுகள் என்றும், இடஒதுக்கீட்டு வகையறாவைச் சார்ந்தவர்களுக்கு 40 ஆண்டுகள் என்றும் வயது வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு வகையறாவில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகிய அனைவரும் இடம்பெறுகின்றனர். வழக்கமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோரிலிருந்து கூடுதலாக வயது வரம்பு தளர்த்தப்படும். அதாவது, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோருக்கான வயது வரம்பும், பிற பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பும் ஒரே அளவாக இல்லாமல், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினரின் வயது வரம்பு சற்றுக் கூடுதலாகவே அல்லது ஐந்து ஆண்டுகள் கூடுதலாகவே தளர்த்தப்படும். உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான வயது வரம்பு பிற பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்புக்கு இணையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான வயது வரம்பை 40லிருந்து 45 ஆண்டுகளாகத் தளர்வு செய்து அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது!
இவண்
(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக