புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில் வருகிற 16ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்


புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில் வருகிற 16 தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் எம்.பி.பேட்டி 

சிதம்பரம்,பிப்.10

புயல் பாதித்த மாவட்டங் களுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கட லூரில் வருகிற 16 ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.

பேட்டி

கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் பாராளு மன்ற உறுப் பினருமான திருமாவளவன் நேற்று கடலூர் வந்தார்.

அதையடுத்து சிதம்பரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த திருமாவளவன் எம்.பி.அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:

கண்டன ஆர்ப்பாட்டம்

தானே புயலால் பாதிக் கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கண்டிக்கிறது.வெறும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து கடலூரில் வருகிற 16ந் தேதி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

புயல் பாதித்த மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.1 லட்சம் ரூபாயை மாற்றி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை கூரை இல்லாத வீடுகளாக மாற்ற கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர வேண்டும்.புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.மீனவர்கள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

துணைவேந்தர் பதவி 

தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர்களை நியமிக்க வில்லை.எஞ்சியுள்ள அன்னை தெரசா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் காலி யாக உள்ள துணைவேந்தர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரை நியமிக்க வேண்டும்.கடந்த ஒரு ஆண்டாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் மாணவர் சேர்க்கை, நிர்வாகத்தில் குளறு படி உள்ளது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 5 ஆண்டு ஒருங் கிணைந்த பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க வேண்டும். இதற்கு கவர்னர் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

இடைநீக்கம்

சட்டப்பேரவையில் எதிர்க் கட்சி தலைவர் விஜயகாந்த் அவை நாகரீகத்தை மீறி விட்டதாக 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு , அரசு சலுகைகளை ரத்து செய்துள்ளனர்.அவை நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் 10 நாட்கள் இடைநீக்கம் செய்திருப்பது பழி வாங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாக அமைந்திருக் கிறது.

ஆளுங்கட்சி தரப்பினரும் அவைமீறல் செய்துள்ளனர்.அவர்கள் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவில் மீன்கள் இல்லை. அந்த பிரச்சினை தேவையற்றது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறிய கருத்து தவறானது.அந்த தீவு இந்தியாவுக்கு, தமிழர்களுக்கு உரியது.அதை மீட்டால் தான் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியும்.கச்சதீவை மீட்க வேண்டும் என்ற முதல்அமைச்சரின் அறிவிப்பை விடுதலைசிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

இடைத்தேர்தல்

சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? என்று நிர்வாகக் குழுவை கூட்டி முடிவு செய்வோம்.சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.கூட்டணி பற்றி யாரும் எங்களுடன் இதுவரை பேசவில்லை.தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு செய்யப்படும்.புயல் நிவாரணத்தில் எதிர்க்கட்சிகள் வியக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து நிலவரியை ரத்து செய்திருந்தார்.

இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்காக கூட இருக்கலாம்.ஏனெனில் மத்திய அரசுரூ.500 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் தமிழக அரசு ரூ.750 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது.இருப்பினும் நில வரியை மட்டும் தள்ளுபடி செய்திருப்பது மக்களுக்கு வியப்பை தரும் வகையில் அமையவில்லை. ஆனால் வரவேற்க தகுந்த திட்டம்.

டாஸ்மாக் கடை

தி.மு.க.அறிவித்த திட்டங்களை மாற்றி அறிவித்து வரும் அ.தி.மு.க. அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால் சிறப்பாக இருக்கும். மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்.பட்டதாரி ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் எம்.பி.கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் திருமாறன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணை செயலாளர் தாமரைச்செல்வன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட செயலாளர் பால.அறவாழி, அரசு ஊழியர் ஐக்கிய பேரவை நீதிவளவன், அனைத்து ஆசிரியர் கூட்ட மைப்பு மாநில இணை செயலாளர் காவியச்செல்வன், கவுன்சிலர் திருவரசு, ரத்தினவேல், இளம் வழுதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

நன்றி : தினத்தந்தி 10.02.2012

0 கருத்துகள்:

கருத்துரையிடுக