சிங்கள தேசிய கொடி எரிப்பு! விடுதலைச் சிறுத்தைகள் கைது!






சென்னை, நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் பன்னாட்டு தோல் பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இலங்கை நிறுவனம் கலந்துகொள்வதைக் கண்டித்தும், அங்கு ஏற்றப்பட்டுள்ள இலங்கைக் கொடியை அகற்றக்கோரியும், இன்று (2-2-2012) காலை 10 மதியளவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னிஅரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உஞ்சை அரசன், பாலசிங்கம், து.கா. பகலவன், புதியவன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிறுத்தைகள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ‘அனுமதியோம்! அனுமதியோம்! இலங்கை நிறுவனத்தை அனுமதியோம்! இனவெறி சிங்களக் கொடி தமிழகத்தில் பறக்க அனுமதியோம்! அனுமதியோம்! ஈழத் தமிழரைக் கொன்று குவித்த இனவெறி இலங்கை நிறுவனத்தை தமிழகத்திற்குள் அனுமதியோம்! இலங்கை நிறுவனத்தை அனுமதித்த இந்திய அரசை கண்டிக்கிறோம்!’ என்று முழங்கியவாறே டிரேட் சென்டரை நோக்கி சென்றனர். அப்போது அரங்கினுள் நுழைந்த சிறுத்தைகள் சிலர் அங்கு ஏற்றப்பட்டிருந்த இலங்கைக் கொடியை இறக்கி அதனை தீயிட்டுக் கொளுத்தியபடி முழக்கங்களை எழுப்பினர். காவல்துறை அனைவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்துள்ளது.

1 கருத்துகள்:

உலகத்தமிழருக்கு , தாய்த்தமிழகம் என்றும் துணையாக இருக்கும் என்பதற்கு எத்தனையோ சம்பவங்கள் உண்டு .அதிலே ஈழத்தமிழருக்காக செய்த தியாகங்கள் எண்ணில்லடங்கா !

மூன்று லட்சம் மக்களைக் கொன்றுக் குவித்தவன்,தமிழகத்திற்கு சாமி கும்பிட வருகின்றான், வெட்கங்கெட்ட கொலையாலிகள்.இந்த லட்சனத்தில் பூமாலை பூசைகள் வேறுநடக்கிறது.என்னடா ! கொடுமையிது.கொலைகாரன் கொடி , தமிழ்நாட்டில் பறப்பது கூடாது. தடை உத்தரவை சட்டரீதியாக பெறுக . பாராட்டுகள்.

2 பிப்ரவரி, 2012 அன்று 9:58 PM comment-delete

கருத்துரையிடுக