ஏப்ரல் 14 - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா



2012-ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியல்
- தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சமூகம், அரசியல், மொழி, இனம் மற்றும் பண்பாடு ஆகிய தளங்களில் தொண்டாற்றி சாதனைகள் படைத்த சான்றோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர். 

அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் ரூ. 50,000/- பொற்கிழி மற்றும் பாராட்டுப் பட்டயத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.

2012ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:


அம்பேத்கர் சுடர் 

திரு. என்.வரதராசன்,
முன்னாள் மாநிலச் செயலாளர்,  இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)


பெரியார் ஒளி 

திரு. ஆனூர் செகதீசன்
துணைத் தலைவர், பெரியார் திராவிடர் கழகம்


அயோத்திதாசர் ஆதவன் 
திரு. சோ.ந. கந்தசாமி,
தலைவர், செம்மொழி உயராய்வு மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.


காமராசர் கதிர் 
முனைவர் ஜெயக்குமார், 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்


காயிதேமில்லத் பிறை 
பேராசிரியர் அப்துல்காதர், 
பொதுச்செயலாளர், தேசிய லீக்


செம்மொழி ஞாயிறு
முனைவர் க.ப. அறவாணன், 
முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.



-இவண்
தொல்.திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக