2-ஜூன் -2009 - ஒரு சமுதாயத்தின் கனவு,வரலாற்று திருப்புமுனை


2-ஜூன் -2009 - ஒரு சமுதாயத்தின் கனவு,வரலாற்று திருப்புமுனை .

அப்படி என்ன நிகழ்வு இந்த நாளில் இருக்கிறது என்று உங்கள் முன்னே இருக்கும் கேள்விக்கு விடையளிக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது.

அண்ணல் அம்பேத்கர்,தந்தை பெரியார்,தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் இந்த பெரும் தலைவர்களை தனது வாழ்கையை வழிநடத்தும் தலைவராக ஏற்றுகொண்ட தமிழகத்தின் இளம் தலைவர் தொல்.திருமாவளவன்...

இந்த தலைவனின் குரல் நமக்கான குரல் என்று ஏற்று கொண்ட ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக.அந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளின் வழிதோன்றல்,எம்மின மீட்பர், போராளி தலைவன்,சேரியில் பிறந்த சிறுத்தை,சிறுத்தைகளின் நாயகன்,உரிமை போராளி, சீர்திருத்த தீப்பொறி, குடிசைகளின் குரல்,அண்ணல் வழி வந்த அண்ணன் இப்படி எத்தனையோ அடைமொழியோடு அழைக்கபட்டாலும் எழுச்சி தமிழர் என்று எல்லோராலும் புகழ பட்டும் மாபெரும் தலைவரை வளர்ந்து வந்த வரலாறு மிக கடினமானது அவர் இந்த நிலையை எட்ட எத்தனையோ தடைகள் , எத்தனையோ முட்டுகட்டைகள் இதை எல்லாம் மீறி இப்படி ஒரு மகத்தான தலைவனாய் அரசியல் வானில் சிறப்பு நட்சத்திரமாய் அவர் மிளிர்வதை மிளிரபோவதை இனி யாராலும் தடுக்க முடியாது...

இந்த நாள் ஒரு சமுதாயத்தின் கனவு , அனைத்தையும் இழந்து நிற்கும் ஈழ தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பு,சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் ...இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார்...

இன்று பதவி ஏற்கும் தொல்.திருமாவளவன் அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தபட்ட ,சிறுபான்மை இன மக்களுக்காகவும் ,ஈழ தமிழருக்காகவும்,உலக தமிழருக்காகவும் ஒலிக்க போகும் இந்த சிறுத்தையின் சீற்றம் ஜூன்-௨ முதல் ஆரம்பம்..

"
இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல சீறிபாயும் சிறுத்தை கூட்டம் "
"
நாங்கள் ஆயுதம் ஏந்தாத புலிகள்"



0 கருத்துகள்:

கருத்துரையிடுக