ஜெர்மனி தமிழர் வாழ்வுரிமை மாநாடு - திருமாவின் எழுச்சி உரை (பகுதி 4)
தொடக்கத்திலேயே நான் ஒன்றை சொன்னேன். இந்தியா எந்தச் சூழ்நிலையிலும் தமிழீழத்தை ஆதரிக்காது. இந்தியா என்று நான் சொல்லுகிறேன். இந்திய அரசு என்று நான் சொல்லுகிறேன். வாஜ்பாயா, சோனியா காந்தியா என்று நான்சொல்லவில்லை. வாஜ்பாய், பாரதிய ஜனதா இந்த நாட்டை ஆண்ட போது ஈழத்தமிழர்ச் சிக்கல் இருந்தது. வாஜ்பாய் இந்துக்களைப் பாதுகாக்கக் கூடிய கட்சியை நடத்துகிறார்.
தமிழீழத்திலே கொல்லப்படுகிறவர்கள் யார்? கிறித்தவர்களா? முஸ்லிம்களா? தமிழீழத்திலே கொல்லப்படுகிறவர்கள் இந்துக்கள்தானே. ஆகவே, அவர் ஆட்சியிலே இருந்தபோது என் சமூகம், இந்துச் சமூகம் அழிக்கப்படுகிறதே என்று உதவ முன்வந்தாரா? தனிஈழத்தை ஆதரித்தாரா? அங்கே இடிக்கப்படுகின்ற கோவில் இந்துக் கோவில்தானே. இந்தியாவில் ஒரு கோவில் இடிக்கப்பட்டால் எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்களே. ஈழத்திலே எத்தனை கோவில்கள் இடிந்தன. குண்டு போடப்பட்டது. என்றைக்காவது பாரதிய ஜனதா கட்சிக்காரன் வந்து ஏன் இடிக்கிறாய்? என்று கண்டித்ததுண்டா? இல்லை, பாரதிய ஜனதாவாக இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி இந்திய அரசின் கொள்கை தமிழீழம் கூடாது என்பதுதான். ஏனென்றால் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பிலே ஓர் அங்கம், சிங்களவர்களும் இந்தியர்களும் அதனடிப்படையிலே நண்பர்கள். அவர்களுக்கிடையிலே ஒப்பந்தம். அவர்களிடத்திலே உறவு. அவர்களிடத்திலே உள்ள நட்புறவை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டமைப்புதான் சார்க். சார்க் நாடுகளின் கூட்டமைப்பிலே இவர்கள் நண்பர்களாயிருக்கிறார்கள்.
இரண்டாவது பனிப்போர். தெற்காசியப் பிராந்தியத்திலே வல்லரசு எது? சீனாவா, இந்தியாவா? இன்றைக்கு சீனா, பாகிஸ்தானுக்கு உதவுவதன் மூலம் மேற்கே காலூன்றிவிட்டான். நேபாளுக்கு உதவுவதன் மூலம் வடக்கே காலூன்றி விட்டான். பங்களாதேசுக்கு உதவுகிறான். மியான்மருக்கு உதவுவதன் மூலம் அங்கே காலூன்றியிருக்கிறான். இன்றைக்கு திருகோணமலைக்குப் பக்கத்திலே இடத்தை வாங்கிப் போட்டிருக்கிறான். அங்கே இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறேன். ஒட்டு மொத்தத்திலே இந்தியாவைச் சுற்றி வளைத்திருக்கிறது சீனா. சீனாவின் தாக்குதலிலிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டுமானால் பாகிஸ்தானோடு நட்றவு கொள்ள முடியாது. பங்களாதேசோடு நட்புறவு கொள்ள முடியாது. நண்பனாக இருக்கிற ஒரே நாடு இன்றைக்கு சிங்கள நாடுதான். இதனைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. இது இந்தியாவின் நோக்கம். அவன் வேண்டாம் என்றாலும் இவன் வலிந்து போய் உதவுகிறான். அவன் தேவையில்லை என்றாலும் இவன் போய் உதவியைத் திணிக்கிறான். ஏனென்றால் அவன் நட்பு அவனுக்குத் தேவை. பாகிஸ்தான் உதவுகிறது, சீனா உதவுகிறது, இஸ்ரேல் விமானம் தருகிறது, பல்வேறு நாடுகள் உதவுகின்றன. இப்படிப்பட்ட உதவிகளெல்லாம் இருக்கிறபோது, இந்தியாவின் உதவி அவனுக்குத் தேவையில்லை. ஆனால் இந்தியா உதவுகிறது. ஏனென்றால் தெற்கே சீனா காலூன்ற அனுமதிக்கப் போவதில்லை. இதுதான் இந்திய அரசின் வெளியுறவு. வாஜ்பாய் இருந்தாலும் இதுதான், சோனியா இருந்தாலும் இதுதான். நாளைக்கு ராகுல்காந்தி வந்தாலும் இதுதான். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின்படி தமிழீழம் அமையக் கூடாது.
ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் ஒரு கூட்டத்திலே சொன்னேன் ஒரு கூட்டத்திலே சொன்னேன். விடுதலைப் புலிகள் போரிலே வென்று தமிழீழத்தை வென்றால் கூட, விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்தி அந்தத் தமிழீழத்தைப்பிடுங்கி சிங்களவனிடம் ஒப்படைக்கும் இந்தியா. அதனை அனுமதிக்காது. ஏனென்றால் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைப்படி இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டிலே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் பாகிஸ்தானுக்கு எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக ஐ.நா. பேரவையில் நடந்த ஒரு கூட்டத்தில் சிங்களவன் ஆதரவுக் கருத்துச் சொன்னதனால் கச்சத் தீவு அவனுக்கு அளிக்கப்பட்டது. இந்திய அரசிலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றுத்தான் கச்சத் தீவைக் கொடுத்திருக்க வேண்டும். இப்போது நான் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே சொன்னேன். பண்டிட் ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, அணிசேராக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியா திருமாவளவன் போராடினாலும் மசியாது, புலம்பெயர்ந்த தமிழர்கள் போராடினாலும் மசியாது, யார் பேச்சைக் கேட்கும் என்றால் அமெரிக்கா பேச்சைக் கேட்கும். அமெரிக்கா பேச்சைக் கேட்டால் இந்தியா இறங்கி வரும். அமெரிக்காவும் இந்தியாவும் அப்படிப்பட்ட நெருக்கமனவர்களாக மாறிவிட்டார்கள். ப்ரோ ரஷ்யா என்பது மாறிவிட்டது. ப்ரோ அமெரிக்கா என்பது வலுப்பெற்று விட்டது. இந்த நிலையிலே அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல, எல்லா வகையான உறவுகளும் அமெரிக்காவோடு ஏற்படும். பொருளாதார உறவுகள், அரசியல் உறவுகள், சமூக உறவுகள்... ஆகவேதான் அல்-கொய்தா இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலே சேர்த்த அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சேர்த்தது. அன்றைக்கே புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எழுச்சி பெற்று அந்தத் தடையை நீக்கச் செய்திருக்க வேண்டும். பெரும் போராட்டத்தினால் அதனை நீக்க வேண்டும். அல்கொய்தா மக்கள் இயக்கமா? விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் இயக்கம். அல்கொய்தா ஒரு விடுதலை இயக்கமா? விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம். அல்கொய்தா ஒரு இராணுவ இயக்கமா? விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு அரசாங்கத்தையை நடத்திக் கொண்டிருந்த, தமிழீழ அரசு நடத்திக் கொண்டிருந்த ஒரு இயக்கம்.
அல்கொய்தா சேர்த்த பயங்கரவாதிகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சேர்த்து விட்டார்கள் சிங்களவர்கள். அதற்கு இந்தியா போன்ற நாடுகளும் துணை போயின. இரட்டை கோபுரம் அமெரிக்காவிலே இடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட சர்வதேசச் சூழல் பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டும் என்பதற்கான ஆதரவு நாடுகளையெல்லாம் திரட்டி ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அந்த அடிப்படையிலே புறப்பட்டன பயங்கரவாதிகளுக்கு எதிராக. உலகத்தில் இன்றைக்கு இரண்டே இரண்டு பேர்தான் அமெரிக்காவின் பார்வையில் பயங்கரவாதிகள். ஒருவர் முஸ்லிம், மற்றொருவன் ஈழத் தமிழன். முஸ்லிமும் ஈழத் தமிழனும் உலகில் எந்த ஒரு விமான நிலையத்திலும் எளிதான வெளியேறிவிட முடியாது. அமெரிக்காவின் பார்வையில் ஒரு முஸ்லிம் பயங்கரவாதி. அமெரிக்காவின் பார்வையில் ஒரு ஈழத்தமிழன் பயங்கரவாதி. ஒவ்வொரு ஈழத் தமிழனும் விடுதலைப்புலி. எனவே பயங்கரவாத எதிர்ப்பு என்கிற அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக காய் நகர்த்துகிறான். அதிலே சிங்களவன் வெற்றி பெற்று இன்றைக்கு நம்முடைய இராணுவ பலத்தை பலவீனம் செய்திருக்கிறான். இந்த நிலையில்தான் சர்வதேச அளவிலான இந்த அரசியலை கணக்கில் கொண்டு அண்ணன் உருத்திரகுமாரன் போன்றவர்கள் இந்த முயற்சியிலே ஈடுபடுகிறார்கள். அதைத்தான் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. சர்வதேச அரசியல் சூழலை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.
வெறும் இராஜபக்சே வெற்றி பெற்றுவிடவில்லை. அல்லது இந்தியா ஆதரவு தெரிவித்ததனால் இராஜபக்சே வெற்றி பெற்றுவிடவில்லை. சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்றுவிட்டான். இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட சர்வதேசச் சூழல் நமக்கு எதிராக அமைந்துவிட்டது. அங்கே அவன் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான நிலையை அவன் கையிலெடுத்தான். அதில் சிங்களவர்கள் இலாவகமாக சாதுர்யமாக விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். இதுவரையில் நாம் சர்வதேச அளவிலே பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்க வேண்டும் என்று வலுத்த குரலை எழுப்பவில்லை. உரத்த குரலை எழுப்பவில்லை. இப்போராட்டம் இனி அப்படித்தான் இருக்க வேண்டும்.
ஈழப் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளால்தான் ஈழப் போரில் வெற்றி பெற முடியும். நான்காம் கட்டப் போர் முடிந்துவிட்டது. இனி ஐந்தாம்கட்டப் போர் வெடிக்கும். அது ஆயுதமேந்திய போரா? அல்லது ஆயுதமில்லாத போரா என்பது வேறு. அதைத்தான் நாம் மக்களிடத்தில் சொல்ல வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அதற்கு ஏற்ப நாம் தயார் படுத்தவேண்டும்.
இயக்கம் அழிந்து விட்டது என்று யாரும் சோர்ந்து விடக்கூடாது. விடுதலை இயக்கம் வரலாற்றில் நிலைக்கும். எத்தனையோ இயக்கங்கள் அழிக்கப்பட்டன. இதே இந்தியா ஜே.வி.பி.யை அழிப்பதற்கு இராணுவத்தை அனுப்பியதா இல்லையா? ராஜீவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தி அம்மையார் இந்திய இராணுவத்தை ஜே.வி.பி. இயக்கத்தை அழிப்பதற்கு அனுப்பினார். முற்றிலும் அழித்துவிட்டோம் என்று இந்திய இராணுவம் வெளியே வந்தது. இன்றைக்கும் ஜே.வி.பி. உள்ளது. ஆனால் அது ஒரு இனவெறி அமைப்பு. இன்றைக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மாறிவிட்டது வேறு. சர்வதேச சட்டம் என்கிற அடிப்படையில் அவன் ஒரு அரசாக இருக்கிற காரணத்தினால் அவனிடம் அதிகாரம் இருக்கிற காரணத்தினால் மற்ற அரசுகளை ஆட்சியாளர்களை எளிதாகச் சந்தித்து அவனுடைய கருத்துகளை மட்டுமே சொல்லி ஆதரவு திரட்ட முடிந்தது. நம்மால் முடியவில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் போவதற்கே நாம் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் போய் குடியிருப்பதற்கே நாம் படாதபாடு படவேண்டியிருக்கிறது. நம்மால் எப்படி ஜெர்மனியின் குடியரசுத் தலைவரைப் பார்க்க முடியும். நம்மால் எப்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரைப் பார்க்க முடியும். நம்மால் எப்படி அமெரிக்க அதிபரைப் போய்ப் பார்க்க முடியும். அவன் ஆட்சி நடத்துகிறான். அரசு நடத்துகிறான். அதிபராக இருக்கிறான். அமெரிக்க அதிபரைச் சந்திக்கிறான். இவன் தரப்பு ஞாயங்களைச் சொல்லுகிறான். இவர்கள் பயங்கரவாதிகள்தான். இவர்கள் பல்வேறு கொலைகளைச் செய்திருக்கிறார்கள். ஜெயவர்த்தனாவைக் கொன்றார்கள். பிரேமதாசாவைக் கொன்றார்கள். ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள். இப்படிப் பெரிய பட்டியல். எனவே இவர்களை நசுக்க வேண்டும் என்று லாபி செய்கிறான். இதை எதிர்த்து, இதை முறியடிக்கக்கூடிய லாபியை நம்மால் செய்ய முடியுமா? அதற்கு வாய்ப்பில்லை. அதனால் இண்டர்நேசனல் லாபி என்கிற பன்னாட்டு ஆதரவைப் பெறுகிற முயற்சியில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. அதனைச் செய்யத் தவறிவிட்டோம், அல்லது கையாலாகாமல்இருந்து விட்டோம் என்று சொல்லவில்லை. நம்மால் முடியாது.
அந்த இரட்டைக்கோபுரம் இடிக்கப்பட்டபிறகு அமெரிக்கா உலக நாடுகளையெல்லாம் ஒருங்கிணைத்து பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்திய அந்தச் சூழல் இலங்கைக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. சிங்களவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. அவனுக்குச் சாதகமாகப் பல நாடுகளைப் பேச வைத்துவிட்டான். இதைப் பற்றி மனித உரிமை அமைப்புகளில் கூட பேசவே கூடாது என்று வீட்டோ பவரைப் பயன்படுத்தி திரும்பத் திரும்பத் தடை பெற்றுவிட்டான். எல்லாம் முடிந்து விட்டது என்று ராஜபக்சே சொன்ன பிறகுதான் பான் கீ மூன் போனார். ஏன் மனிதநேய அடிப்படையில் ஜனவரிமாதம் போயிருக்கலாம், பிப்ரவரி மாதம் போயிருக்கலாம், மார்ச் மாதம் போயிருக்கலாம், ஏப்ரல் மாதம் போயிருக்கலாம். இந்தியாவுக்குத்தான் மனிதநேயம் இல்லை, தாயுள்ளம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏன் இல்லாமல் போனது. நார்வே நாடு ஏன் தலையிடாமல் போனது. ஏன் அமெரிக்காவேடிக்கை பார்த்தது. ஏன் ஐ.நா. பேரவை வேடிக்கை பார்த்தது. தயவுகூர்ந்து இதையெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமக்கு இது ஒரு சவால். சர்வதேச அளவில் நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை இயக்கம். அந்த இயக்கத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். அதன் மீதான தடையை நீக்க வேண்டும். எமக்கான தீர்வு தமிழ் ஈழம்தான். ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமை பெறுவதல்ல. தமிழீழம்தான் தீர்வு என்கிற கருத்தினை முன்னெடுத்துச் செல்லுகிற முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஈடுபட வேண்டும். ஈழப்போர் முற்றுப்பெறவில்லை. ஈழம் சிதைந்துவிடவில்லை. நாம் உறைந்து கிடக்கிறோம். சிதைந்துவிடவில்லை. விடுதலைப் போரிலே மக்கள் பலியாவது, போராளிகள் பலியாவது, தளபதிகள் பலியாவது ஒரு இயல்பான மரபுதான். தவிர்க்க முடியாது. சாவை எதிர்பார்த்துதான் களமாடுகிறார்கள் போராளிகள். சாவு வந்துவிடுமே என்று அஞ்சியிருந்தால் சனவரி 2ந்தேதியே வீட்டிற்கு ஓடியிருப்பார்கள். உலகத்தில் இப்படியொரு மாவீரன் இனி பிறக்க மாட்டான். வரலாற்றில் பிறக்கவில்லை. அண்ணன் பிரபாகரன் அவர்கள்தான் இன்றைக்கு ஒப்பிட முடியாத, ஈடில்லாத மகத்தான மாவீரன். கடைசி வரை நின்று போராடினார். உலக நாடுகளே படையினைத் திரட்டி வா, உன்னுடன் நான் மோதத் தயார் என்று ஆறு மாத காலம் தொடர்ந்து போராடிய பெரும் வீரன். மாவீரன் தலைவர் மேதகு பிரபாகரன். எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கிறது. அழியவில்லை. ஈழ விடுதலைப் போர் தொடரும். முற்றுப்பெறவில்லை. அதற்கான களப்பணிகளை முழுமூச்சாகத் தொடங்குவோம். அந்தப் பணிகளை முன்னெடுப்போம். ஈழம்வெல்லும் அதனைக் காலம் சொல்லும் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
ஜெர்மனி - மாநாட்டில் திருமாவின் எழுச்சிமிகு உரை MP3(தரவிறக்கம்)
-

0 கருத்துகள்:
கருத்துரையிடுக