இலங்கையில் உள்ள மலையக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் பெ. சந்திரசேகரன் மறைந்தார்

இலங்கையில் உள்ள மலையக மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பெ. சந்திரசேகரன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சந்திரசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் பூதவுடல் இன்று மாலை 5.00 மணி முதல் எண்: 40, மெதவெலிகட, ராஜகிரிய என்ற விலாசத்திலுள்ள அமைச்சரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படவுள்ளது. நாளை 11.00 மணிமுதல் 12.30 மணிவரை அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் கடுவளை வீதிவழியாக அமைச்சரின் சொந்த இடமான தலவாக்கலைக்குப் பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். கிதுல்கலையிலிருந்து மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பூதவுடலைப் பொறுப்பேற்று அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்வர்.
எதிர்வரும் நான்காம் திகதி மாலை 6.00 மணியளவில் தலவாக்கலை நகரசபை பொது மயானத்தில் அமைச்சரின் பூதவுடல் அரச மரியாதைகளுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

இவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் விமானம் மூலம் கொழும்பு சென்றுள்ளார்..
விடுதலை சிறுத்தைகள் சார்பாக மறைந்த சந்திரசேகரன் அவர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறோம்..
..

0 கருத்துகள்:
கருத்துரையிடுக