திரைப்படத் தயாரிப்பாளர் காஜாமைதீன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் காஜாமைதீன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.இவர் தனது ரோஜா கம்பைன்ஸ் பட நிறுவனம் சார்பில் 25-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
அவர் இன்று (30.09.2010) மாலை 5.00 மணியளவில் தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெறும் இணைப்பு விழாவில் தனது ஆதரவாளர்கள் 1000 பேருடன் எழுச்சித்தமிழர் திருமாவளவன் முன்னிலையில் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைகிறார்.
வி.சி.குகநாதன், சிவசக்திபாண்டியன், ராதாரவி, ஆர்.கே.செல்வமணி, முரளிதரன், சித்ராலட்சுமணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வாழ்த்தி பேசுகின்றனர்.
இது குறித்து காஜாமைதீன் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில்,
’’நானும் என்னைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நாளை இணைகிறோம். தலைவர் திருமாவளவனை சமீபத்தில் சந்தித்த போது அவரது அன்பும் அரவணைப்பும் சகோதரத்துவ ரீதியில் இருந்தது. அவரால் ஈர்க்கப்பட்டேன்.
எதிர்வரும் காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறும் என்பதில் ஐயமில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன். அது என் தொழில் எனக்கு முகவரி கொடுத்தது. தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன். அரசியலில் தலைவர் திருமாவளவன் கட்டளையை ஏற்று செயல்படுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
1 கருத்துகள்:
sir now you take the correct decition to join our party we proved tamilans are grater and born to get the victory.
karupalani
கருத்துரையிடுக