ஏப்ரல் 2012-ல் 3டி டைட்டானிக்!


உலக அளவில் வசூலை வாரிக் குவித்ததோடு, ரசிகர்களின் மனதையும் கொள்ளைக் கொண்ட ஜேம்ஸ் கேமரூனின் 'டைட்டானிக்', 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3 டி சினிமாவாக வெளியாகிறது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி, நூறு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு 2012 ஏப்ரலில் இப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1912 ஏப்ரல் 14-ம் தேதி 66 ஆயிரம் டன் எடை உள்ள டைட்டானிக் கப்பல் அட்லான்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது மோதி மூழ்கியது. இதில், 1,513 பேர் உயிர் இழந்தனர்.
டைட்டானிக்கில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில் கடைசி நபரான நூறு வயது பாட்டி ரோஸ் டிவிட் புகேடர், கப்பல் மூழ்கிய விவரத்தையும், ஓவிய இளைஞன் ஜேக் தாஸனுடனான தனது காதல் அனுபவத்தையும் ஒன்றிணைத்துச் சொல்லும்படியாக அமைக்கப்பட்டிருந்தது, டைட்டானிக் திரைப்படம்.
நெகழ்வூட்டும்படியாக இழைக்கப்பட்ட காதல் கதையுடன் பெரும் விபத்தின் பின்னணியை பதிவு செய்த இப்படம், ஆஸ்கர்களையும் அள்ளிக் குவித்தது.
அத்துடன், லியானர்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட்டை ஓவர் நைட்டில் உலகப் புகழடையச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
'3டி-க்கு மாற்றப்பட்டுள்ள டைட்டானிக் படத்தை கப்பல் மூழ்கிய நூறாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 2012-ல் வெளியிடப்படும்," என்று இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் உறுதி செய்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி : ய்த்புல் விகடன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக