வருமான வரி அதிகாரி எனக் கூறி மோசடி: முன்னாள் எம்.எல்.ஏ., கைது


வருமான வரி அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை அசோக் நகரில் ஓய்வு பெற்ற பொறியாளர் வெங்கட்ராகவன் என்பவர் வசித்து வருகிறார். வெட்கட்ராகவன் வீட்டுக்கு ரவிசங்கர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது வருமான வரி அதிகாரி என கூறி வெட்கட்ராகவனை மிரட்டியதாக கூறப்படுகிறது. மிரட்டியதால் 25 சவரன் நகையை வெட்கட்ராகவன் கொடுத்துள்ளார்.
இந்த தகவல் தெரிந்த அக்கம்பக்கத்தினர் நகையுடன் சென்ற ரவிசங்கரை பிடித்துள்ளனர். அப்போது வருமான வரி அதிகாரி எனக் கூறிக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ரவிசங்கரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். அப்போது தான் முன்னாள் எம்எல்ஏ எனக் கூறியதால், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவிசங்கரை கைது செய்தனர்.
கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை விளாத்திகுளம் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ரவிசங்கர். போதை மருந்து கடத்தல் வழக்கில் சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு பிடிபட்டார். மற்றொரு வழக்கிற்காக நெல்லை அழைத்துச் சென்ற போது 2006ஆம் ஆண்டு தப்பித்தார். 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து ரவிசங்கரை சென்னையில் போலீசார் இன்று கைது செய்தனர்.
ரவிசங்கர் சென்னை போரூரில் தங்கி பல இடங்களில் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ரவிசங்கரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக