மெட்ரோ ரயில் பணி 2015ல் முடிவடையும்: ஸ்டாலின்
சென்னை நகர மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் மெட்ரோ ரயிலின் பணிகள் வரும் 2015ஆம் ஆண்டு முடிவடையும் என, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை 2020 குறுந்தகட்டை வெளியிட்டார். பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின்,
மெரினா கடற்கரையையும் சென்னை நகரில் உள்ள பல்வேறு பூங்காக்களையும் தரம் உயர்த்தி அழகு படுத்தப்பட்டுள்ளன.
அடையார் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையார் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக அரியவகை பூக்கள் மற்றும் செடிகளை கொண்ட உலகத்தரத்துடன் கூடிய தோட்டக்கலை பூங்கா 22 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை நகரின் தற்போதைய குடிநீர் தேவை நாளொன்றுக்கு 650 முதல் 700 மில்லியன் லிட்டர். இதில் பெரும்பாலும் நிலத்தடி நீரும் கொண்டு இந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை துவக்கி உள்ளது.

பொதுத்துறையில் இதே போன்று மற்றொரு திட்டத்தை தென் சென்னையில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் 15 டிஎம்சி அளவுக்கு குடிநீர் சப்ளையை அதிகரிக்க பொருத்தமான நீராதாரத்தை தேர்வு செய்ய ஆலோசகர்களை அரசு நியமித்துள்ளது.

சென்னை விமான நிலையம் நாட்டின் 3வது பெரிய விமான நிலையமாக திகழ்கிறது. 2020ம் ஆண்டு வாக்கில் பயணிகள் போக்குவரத்து 27.6 மில்லியனாக அதிகரிக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்கால தேவையை சமாளிக்க கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பது அவசியம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
நிதி நகரம், விளையாட்டு நகரம், ஊடக நகரம் போன்றவற்றை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னை நகரம் வளர்ந்து வரும் நிலையில் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் உள்ள இடர்பாடுகளை நான் அறிவேன்.
சர்வதேச தரத்துடன் கூடிய அடிப்படை வசதியை செய்வதற்கு தேவையான அனைத்துநடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
சென்னை நகர மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதை திட்டத்தில் 24 கிலோ மீட்டர் தூரம் பாதாள ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.
அண்மையில் இந்த திட்டத்தை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை அரசு நீட்டிப்பு செய்தது. இந்த திட்டம் 2015ம் ஆண்டு முடிவடையும்.
ஏற்கனவே 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிதாக 11 மேம்பாலங்களை கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அதிவேக வட்டச்சாலைகள் அமைக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக