விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி கையெழுத்து இயக்கம்
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி சென்னை பத்திரிக்கையாளர் மன்ற வளாகத்தில் நேற்று மாலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கையெழுத்திட்டு பேசும்போது, விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும். இதற்காக எல்லோரும் இதில் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றார்.
இந்த கையெழுத்துப் போராட்ட நிகழ்வில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட ஏராளமான அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கையெழுத்திட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக