ராஜபக்சவின் கொடும்பாவி எரிப்பு - தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்





காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் நிறைவு விழாவிற்கு வரும் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு தலைமை தாங்கினார்.

பாதுகாப்புக்காக காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் காவல் துறையின் தடையை மீறி ராஜபக்சேயின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.







ஆர்ப்பாட்டத்தில் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், இரா.செல்வம், சாரநாத், வேலுமணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.




தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக விடுதலைச் சிறுத்தைகள் ராஜபக்சேயின் கொடும்பாவியை எரித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக