அரவாணின் குறிப்புகள்
பாம்படத்தி
ஆழ்மனத்திலிருந்து
குமிழிகள் எழுந்து
உடலெங்கும் பரவியது
பெண்களின்சிநேகம்
அறுத்துப்போடப்பட்ட
இருக்கங்களில் முளைத்தது நேசம்
கனவைக்கொத்தியபடி
கூவியது சேவல்
யாரோ ஒருவரின் சேலாவாக்க
யாரோ ஒருவரிடம் ரீத்துபோட்டு
திருகு கோலமும்
திருட்டுதாவணிக்கட்டும்
அக்காவின் செருப்பும்
அபிநய பாவனையும்
வந்துகொண்டேயிருந்தது
பொண்டுகச்சட்டி
ஒம்பது
வார்த்தைகளின்
ஆயுதம்
தாயம்மாவிடம் நிர்வாண நாளை
முன் வைக்க கோரிக்கை
II
எதுவோடு
உறவாக
இடுகிறாயோ தடைகளை
தடைகளை தின்று
அதுவாகவே மாறுகிறேன்
இப்போது உன்னாள் புடுங்க முடியாது
உறுப்பையும்
பால் சீர் வழிந்து கொண்டிருக்கிறது
கோத்திக்ளோடு டீடீ யடித்து
பந்திகளோடு பீலீபண்ணி
III
மாத்தம்மாவின்
உடலுக்குள்ளிருந்து பாகங்களை
பிச்சைபெற்று
கடைகேட்டு போகிறவர்களில்
அரிதாக இருக்கிறது
பத்மினிகள் பத்மநாபனாகுவது
அம்பைக்கு பின்னால்
IV
என் மதமில்லை
என் சாதியில்லை
என் பால் இல்லை
எதுவுமில்லா மோனம்
குஞ்சையறுத்து
கூரையில் போடவேண்டுமென்றிருந்தது
V
சமூகம்
அவர்களுடைய
குரோமோசோம்களை திருடிக்கொண்டிருக்கிறது
பொட்டிபோடவும்
தந்தாவிலிருக்கவும்
எல்லோரும்
டைரீசியஸ் ஆகிவிடுகிறார்கள்
இங்கே
மனுசர்களாள் அன்னகர்களாக்கப்பட்டவர்கள்தான்
அநேகம்
VI
உன் சமூகம்
அழகென பூசி வைத்திருக்கிற
அழுகல்கள்
முகத்தில்
சண்டாசை எறிகிறது
என் ஜமாத்
- இலட்சுமணன் ( naathaari@gmail.com)
ஆழ்மனத்திலிருந்து
குமிழிகள் எழுந்து
உடலெங்கும் பரவியது
பெண்களின்சிநேகம்
அறுத்துப்போடப்பட்ட
இருக்கங்களில் முளைத்தது நேசம்
கனவைக்கொத்தியபடி
கூவியது சேவல்
யாரோ ஒருவரின் சேலாவாக்க
யாரோ ஒருவரிடம் ரீத்துபோட்டு
திருகு கோலமும்
திருட்டுதாவணிக்கட்டும்
அக்காவின் செருப்பும்
அபிநய பாவனையும்
வந்துகொண்டேயிருந்தது
பொண்டுகச்சட்டி
ஒம்பது
வார்த்தைகளின்
ஆயுதம்
தாயம்மாவிடம் நிர்வாண நாளை
முன் வைக்க கோரிக்கை
II
எதுவோடு
உறவாக
இடுகிறாயோ தடைகளை
தடைகளை தின்று
அதுவாகவே மாறுகிறேன்
இப்போது உன்னாள் புடுங்க முடியாது
உறுப்பையும்
பால் சீர் வழிந்து கொண்டிருக்கிறது
கோத்திக்ளோடு டீடீ யடித்து
பந்திகளோடு பீலீபண்ணி
III
மாத்தம்மாவின்
உடலுக்குள்ளிருந்து பாகங்களை
பிச்சைபெற்று
கடைகேட்டு போகிறவர்களில்
அரிதாக இருக்கிறது
பத்மினிகள் பத்மநாபனாகுவது
அம்பைக்கு பின்னால்
IV
என் மதமில்லை
என் சாதியில்லை
என் பால் இல்லை
எதுவுமில்லா மோனம்
குஞ்சையறுத்து
கூரையில் போடவேண்டுமென்றிருந்தது
V
சமூகம்
அவர்களுடைய
குரோமோசோம்களை திருடிக்கொண்டிருக்கிறது
பொட்டிபோடவும்
தந்தாவிலிருக்கவும்
எல்லோரும்
டைரீசியஸ் ஆகிவிடுகிறார்கள்
இங்கே
மனுசர்களாள் அன்னகர்களாக்கப்பட்டவர்கள்தான்
அநேகம்
VI
உன் சமூகம்
அழகென பூசி வைத்திருக்கிற
அழுகல்கள்
முகத்தில்
சண்டாசை எறிகிறது
என் ஜமாத்
- இலட்சுமணன் ( naathaari@gmail.com)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக