2011 சட்டப்பேரவைத் தேர்தல்: தொல்.திருமாவளவனுக்கு முழு அதிகாரம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (18.01.2011) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, அமைந்தகரையிலுள்ள செல்வம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன், கா. கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
- எதிர்வரும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்குவதென இக்கூட்டம் ஒருமனதாக முடிவுசெய்கிறது.
- உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை 2011 சனவரி 31ஆம் நாளோடு நிறைவு செய்வதென்றும், அதற்குள் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் உறுப்பினர் படிவங்களையும், அதற்கான தொகையையும் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், தாமதமாகப் பணிகள் தொடங்கப்பட்ட நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் பிப்ரவரி 28 வரை காலநீட்டிப்பு வழங்குவதெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது..
இவண்
(தொல். திருமாவளவன்)
2 கருத்துகள்:
அண்ணன் அவர்களே நாகை மாவட்டத்திற்கு தங்களின் சிறப்பு கவனம் தேவை. மிகுந்த எழுச்சியோடு வளர்ந்து வந்த நம் கட்சி அங்கே சற்று தொய்வு அடைந்திருப்பதகவே தோன்றுகிறது.
அன்புராஜ், புனே
vazhum Ambedkare, Periyarin Kolgaiye ungalai Vanangugiren
கருத்துரையிடுக