தாய்பார்வதிஅம்மாள் இறப்பு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே பேரிழப்பு
தாய் பார்வதி அம்மாள்இறப்பு ஒட்டு மொத்தத் தமிழினத்திற்கே பேரிழப்பு
தொல்.திருமாவளவன் உருக்கம்
தமிழீழ விடுதலைப் புகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் திருமிகு பார்வதி அம்மாள், வல்வெட்டித்துறை பொது மருத்துவமனையில் நீண்டகாலமாக உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லையில் இன்று (20-02-2011) அதிகாலையில் காலமாகிவிட்டார்.
அவருடைய இறப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உலகத் தமிழர்களை தலைமிர வைத்த தமிழீழத் தேசியப் புரட்சியாளர் மேதகு பிரபாகரன் அவர்களை ஈன்ற மகத்தான பெருமைக்குரிய அன்னை பார்வதி அம்மாளின் இறப்பு உலகத் தமிழர்களுக்கு தாங்கவொண்ணாத் துக்கத்தை அளிப்பதாகும். பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து உற்ற துணைவரை இழந்து தாளமுடியாத் துக்கத்தில் விழுந்து தனிமையில் வாடிய தாய் பார்வதி அம்மாள் பத்துகோடித் தமிழர்களுக்கும் தாய் என்னும் பெருமையைப் பெற்றிருந்தாலும் அவர்களின் கடைசிப் பொழுதுகளில் உடனிருக்க ஒருவருமே இல்லை எனும் அவலத்திற்கு ஆளான லையை எண்ணி விம்முவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை. அவரது இழப்பு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே பேரிழப்பாகும். அவரது இழப்பால் உள்ளம் வருந்தும் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி ஆறுதல் தேடும் நிலையே உள்ளது.
அந்த வகையில் தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும்.
குறிப்பு: நாளை மறுநாள் செவ்வாய்க் கிழமை மாலை 3 மணியளவில் வல்வெட்டித்துறையில் நடைபெறும் பார்வதி அம்மாள் இறுதி அடக்க நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொள்கிறார்.











1 கருத்துகள்:
தலைமைச் சிறுத்தையே.... உன்னுடைய வீரத்திற்கு இத்தமிழகத்தில் இணையில்லை!
கருத்துரையிடுக