விருதுகள் வழங்கும் விழா
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 14- அன்று ஆண்டுதோறும் விடுதலைச்சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் விழா எடுப்பது வழக்கம். அது சிறுத்தைகள் கொண்டாடும் "சித்திரைத்திருவிழா" என்னும் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அண்மைக்காலமாக, அதே நாளில், சமூகத்தொண்டு செய்யும் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவையும் இணைத்து நடத்தி வருகிறோம். அய்யோத்திதாசர்ஆதவன், அம்பேத்கர்சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், காயிதேமில்லத்பிறை மற்றும் செம்மொழிஞாயிறு என்னும் ஆறு விருதுகளும் தலா ஐம்பதாயிரம் பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விழா சட்டப்பேரவைத்தேர்தல் குறுக்கிட்டுள்ள நிலையில் , நாள் குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது. விருதுகள் வழங்கும் விழா எப்போது நடக்கும் என்பதும் விருது பெறுவோர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும். இந்நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 - அன்று வழக்கம்போல மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி , ஆங்காங்கே அமைதியான முறையில் கொண்டாடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
--- தொல். திருமாவளவன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக