வாக்களிக்கத் தவறக்கூடாது" - திருமா அறிக்கை
ஏப்ரல்13- அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கவேண்டும். தி மு க தலைமையிலான கூட்டணி, அ தி மு க தலைமையிலான கூட்டணி ஆகிய இரு அணிகளையயும் சீர்தூக்கிப் பார்த்து மக்கள் வாக்களிக்கவேண்டும் இவ்விரு அணிகளின் தலைவர்கள் கடந்த காலத்தில் ஆற்றிய பணிகள் . சாதனைகள் மற்றும் எதிர்வரும் காலங்களில் ஆற்றவிருக்கிற வாக்குறுதிகள் யாவற்றையும் மக்கள் மதிப்பீடு செய்து பார்க்கவேண்டும், தனிநபர் விமர்சனங்கள் , பழி வாங்கும் உணர்வுகள் போன்றவற்றை முன்னிறுத்தி செய்யப்படும் பரப்புரைகளுக்கு செவிமடுக்காமல், முதல்வர் பொறுப்பிலே அமர்ந்து ஆட்சி செய்யும் அனைத்து தகுதிகளும் கொண்ட தலைவர் யார் என்பதை வாக்காளர்கள் ஒப்பிட்டு பார்த்து வாக்களிக்கவேண்டும். கடந்த மார்ச்சு 23 முதல்19 நாட்கள் தி மு க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டேன். அவ்வாறு நான் மேற்கொண்ட பிரச்சாரத்தில் தி மு க கூட்டணி அமோக வெற்றி பெரும் என்பதைக் காண முடிந்தது. மீண்டும், தி மு க ஆட்சி தொடர தமிழக மக்கள் விரும்புவதை, ஆங்காங்கே தன்னியல்பாக உருவான பொதுமக்களின் எழுச்சியிலிருந்து உணர முடிகிறது.
வாக்களிப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கருதாமல், ஒவ்வொருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதை நெஞ்சிலே நிறுத்தி வாக்களிக்கவேண்டும்.அவரவருக்கான தீர்ப்பை அவரவரே எழுதிக்கொள்ளும் ஒரு அரசியல் கடமையே வாக்களிப்பதாகும். "வாக்களிக்கத் தவறக்கூடாது" என்பது எவ்வளவு இன்றியமையாததோ , அதைவிட "தவறாக வாக்களிக்கக்கூடாது" என்பது மிக மிக இன்றியமையாததாகும். எனவே, களத்தில் உள்ள இரு அணிகளுக்கான தலைவர்களின் சமூக அக்கறையினையும், தலைமைப்பண்புகளையும் , கடந்த கால சாதனைகளையும் மற்றும் நம்பகத்தன்மையினையும் ஒப்பிட்டு சீராய்வு செய்து அவற்றினடிப்படையில், யார் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதையும் மனதில் வைத்து, வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும். அதாவது, யார், யார் சட்டமன்ற உறுப்பினர்களாகவேண்டும் என்பதைவிட யார் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதே இந்தத்தேர்தலில் முதன்மையானதாக கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

தொல். திருமாவளவன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக