மக்கள் தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறோம்! தமிழின மேம்பாட்டுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து வீரியத்துடன் பணியாற்றுவோம்! தொல்.திருமாவளவன் அறிக்கை!

நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கியிருக்கிற தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் தலைவணங்கி வரவேற்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஊடகங்களாலும் கணிக்க முடியாத வகையில் மக்களால் புறந்தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு அனைத்துக் கிராமங்களும், அனைத்துக் குடும்பங்களும் பயன்பெறத்தக்க வகையில் ஏராளமான நலத் திட்டங்களை அறிவித்து அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது. அத்தகைய நலத்திட்டங்களின் விளைவாக தி.மு.க. கூட்டணியை வெகுவாக மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தகர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

காரணங்கள் எவையாக இருந்தாலும் மக்கள் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு தமிழக நலன்களுக்காகவும் தமிழின மேம்பாட்டுக்காகவும் குறிப்பாக ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் வீரியத்தோடு களப்பணியாற்றும்.

புதிதாக அமையவிருக்கிற அ.தி.மு.க. அரசு கடந்த தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டங்களை, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு கூரை வீடுகளை அகற்றிக் காரை வீடுகளைக் கட்டித்தரும் திட்டம் போன்ற அடித்தட்டு மக்களுக்கான அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


இவண்

(தொல். திருமாவளவன்)

3 கருத்துகள்:

கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. "அனைத்துக் குடும்பங்களும்" பயன்பெறத்தக்க வகையில் ஏராளமான நலத் திட்டங்களை அறிவித்து அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.சினிமாத் துறை ஏகபோகம்,தொலைக் காட்சி ஏகபோகம்,இன்னுமின்னும் இன்னோரன்ன நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் கருத்துக் கணிப்பொன்றை நடத்தி "குடும்பச்" சண்டையாகி கொலை வரை சென்று மீண்டும் "மக்கள்" நலனைக் கருத்தில் கொண்டு சமாதானமாகியது!ஆனால் ஈழத்தில் நீண்ட காலத்துக்கு முன்னர் போராளிக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் மட்டும் "சகோதர"யுத்தமானது!

யோகா.எஸ்
14 மே, 2011 அன்று 2:03 AM comment-delete

Dear Anna and beloved panthers don’t get disappointment; we will come up very soon. This is the time to evaluate our strength and weakness of our party and to rectify our weakness.

16 மே, 2011 அன்று 2:15 AM comment-delete

Dear Anna and beloved panthers don’t get disappointment; we will come up very soon. This is the time to evaluate our strength and weakness of our party and to rectify our weakness.

16 மே, 2011 அன்று 2:16 AM comment-delete

கருத்துரையிடுக