23 தமிழக மீனவர்கள் சிங்களக் காடையர்களால் சிறைப்பிடிப்பு! இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!
இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 23 பேரை 5 படகுகளுடன் சிங்கள இனவெறிக் காடையர்கள் சிறைப்பிடித்துள்ளனர். சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி அவர்களைக் கைது செய்து தமது இனவெறி ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். இந்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரி சிவசங்கரமேனன் அண்மையில் இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவைச் சந்தித்துவிட்டு திரும்பியிருக்கின்ற சூழலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்திய அரசுக்கும் சிங்கள இனவெறி அரசுக்கும் இருக்கின்ற உறவு எத்தகையது என்பதைப் புலப்படுத்துகிறது. ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களையும் அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை சிங்களக் காடையர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு இந்திய அரசின் மெத்தனமும் தமிழின விரோதப் போக்கும் சிங்கள இனவெறியர்களுக்கு அளித்து வருகிற ஊக்கமும் காரணங்களாக அமைந்துள்ளன. தமிழினத்திற்குரிய பாதுகாப்பை வழங்குவதற்கு இந்திய அரசு எந்த வகையிலும் அக்கறை செலுத்தவில்லை என்கிற நிலையிலும்கூட இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் நிலையிலேயே தமிழினத்தின் வாழ்நிலை இருப்பது வெட்கக் கேடானதாகும். எனினும் வேறு வழியில்லாத நிலையில் தமிழினமும் தமிழக அரசும் இந்திய ஆட்சியாளர்களிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இந்நிலையில் அறுதிப் பெரும்பான்மை வலிமையோடு ஆட்சி நடத்தும் அதிமுக அரசு உரிய அழுத்தம் கொடுத்து இந்திய அரசை விரைந்து செயல்பட வைக்க ஆவன செய்ய வேண்டும். தமிழக மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்புக் கிடைத்திடவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் வரும் 23-6-2011 வியாழன் அன்று (நாளை மறுநாள்) சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பன்னாட்டு உபயோகப் பொருட்காட்சியில் சிங்களர்களின் உற்பத்திப் பொருட்களும் இடம்பெறுகின்றன. சிங்கள அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிற தமிழக அரசு இந்தக் கண்காட்சியில் சிங்களர்களின் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக