திருமாவின் வழி நடத்தல் வரலாற்றின் வலியுறுத்தல்....
மராட்டியத்தில் 1972 ல் தொடங்கப்பெற்ற இந்திய தலித் சிறுத்தைகள்’ (Dalit Panthers of India) என்ற அமைப்பாய் ஊற்றம் பெற்று அதே பெயரில் மதுரையில் உருவான அமைப்பிலிருந்த முன்னோடி இளைஞர்கள் துவக்கிய அமைப்புதான் 'விடுதலைச்சிறுத்தைகள் கட்சி’!
அக்கட்சியின் ஆறு குறிக்கோள்களையும் கீழ்வருமாறு விளக்குகிறது விடுதலைச்சிறுத்தைகளின் அமைப்பு விதி. அவை,
1. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வழித்தடத்தில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை அரசியலமைப்புக்குள் திரட்டுவதும், அந்த அமைப்பை வளர்ப்பதும்.
2. அரசியல், சமூகம், பொருளியல், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தலித்துகள் தலைமையை நிறுவுவது
3. சாதி, மதம் ஆகியவற்றின் பேரால் தலித் குலத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள தீண்டாமை உள்ளிட்ட இழிவுகளையும் கொடுமைகளையும் எதிர்த்துப் போரிட்டுச் சாதி ஒழிப்பு என்ற இலக்கை அடைவது
4. நிலக்கிழாரியத்துக்கும் முதலாளித்துக்கும் அடித்தளமாக அமைந்துள்ள வர்க்க ஒடுக்குமுறையையும், அதன் உள்ளீடான உழைப்புச் சுரண்டலையும் ஒழித்துக்கட்டத் தொழிலாளி வர்க்கத்தைத் திரட்டுவது
5. ஆணாதிக்கம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளையும் ஒழித்துப் பாலியல் சமத்துவத்தை நிறுவுதல்,
6. சம உரிமை பெற்ற சமதர்மச் சமூகம் அமைவதை உறுதிப்படுத்த உழைப்பது
இந்த ஆறு நோக்கங்களையும் கவனித்தால் சுரண்டலை ஒழிக்கும் வர்க்கப்போரையும் தீண்டாமையை ஒழிக்கும் வர்ணசாதிப் போரையும் இணைக்கும் புதிய சனநாயகப் புரட்சிக்கான கருவை விடுதலைச்சிறுத்தைகள் சுமந்திருப்பது புலனாகிறது. இந்தக் கொள்கை அறிக்கை என்பது நம் சமூகத் தேவைகளைத் துல்லியமாகக் கணக்கெடுத்துப் பெறப்பட்ட போர் உத்தியாக அமைந்துள்ளது.
இந்த ஆறு நோக்கங்களையும் கவனித்தால் சுரண்டலை ஒழிக்கும் வர்க்கப்போரையும் தீண்டாமையை ஒழிக்கும் வர்ணசாதிப் போரையும் இணைக்கும் புதிய சனநாயகப் புரட்சிக்கான கருவை விடுதலைச்சிறுத்தைகள் சுமந்திருப்பது புலனாகிறது. இந்தக் கொள்கை அறிக்கை என்பது நம் சமூகத் தேவைகளைத் துல்லியமாகக் கணக்கெடுத்துப் பெறப்பட்ட போர் உத்தியாக அமைந்துள்ளது.
வர்க்க முரண்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சமூகநீதி இயக்கங்கள் ஒருபுறம். சமூக நீதியைக் கருத்தில் கொள்ளாத உழைக்கும் வர்க்க அமைப்புகள் மறுபுறம் என்று கடந்த 80 ஆண்டுகளாகத் தத்தம் வழியில் தனித்தனியாய் இயங்கிக்கொண்டிருந்த திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் ஆகியவற்றின் சாரமாக வர்க்க விடுதலையையும் வர்ண விடுதலையையும் இணைத்து வென்றெடுக்கும் வேட்கையைக் கட்சின் நோக்கமாகப் பதிவு செய்துள்ளது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வர்க்கப் போரையும் வர்ணப் போரையும் ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் இலக்காகத் தேசியப் போரை அக்கட்சி தெரிவு செய்ததில்தான் தமிழ்நாட்டு அரசியலை முழுமைப்படுத்திய முப்பரிமாணக் கொள்கையை முதன்முதலில் தன் போர்த்தடமாகப் பிரகடனப்படுத்திய புரட்சிநோக்கு விடுதலைச்சிறுத்தைகளிடம் வெளிப்பட்டது.
தேசியப் போர் என்பது தமிழ்த் தேசியப் போரே, தமிழ்த்தேசியத்தைக் கோட்பாடாகவும் தலித்தியத்தை அதன் உள்ளீடாகவும் வரித்துக் கொண்ட அரசியல் முதிர்ச்சி ஒரு இளைஞனுக்குள் முகிழ்ந்ததால்தான் திருமாவளவன் தலைவனாக வெளிப்பட்டான்; சேரி மகன் தமிழனாகப் புறப்பட்டான்.
***
பேச்சுகள், பேருரைகள், பட்டறைகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், மாநாடுகள், தீர்மானங்கள் என்று காற்று வெளியிலேயே தமிழன்னைக்குக் கோட்டை நிறுவிக்கொண்டிருந்த தமிழியச் சூழலில், சொற்களத்திலிருந்து இறங்கி வந்து செயற்களத்தில் காலூன்றி நின்று ஒரு சிறிய மெழுகுத் திரியை ஏற்றியதன் மூலம் தமிழ் மண்ணில் விடுதலைச்சிறுத்தைகள் விளைவித்த வெளிச்ச விரிப்பு வரலாற்றின் வியப்புக்குரியது.
ஒளிபரப்பிய அந்த ஒற்றைத் திரி என்பது என்ன? ஒரு லட்சம் பேருக்குச் சமயப் பெயர்களை நீக்கித் தமிழ்ப் பெயரைச் சூட்டிய நிகழ்ச்சிதான் அது. நூறாயிரம் அடித்தட்டு மக்கள் ஈராயிரம் ஆண்டுகள் பார்ப்பனியத்தால் பாதிப்பட்டதால் ஏற்றுக்கொண்டிருந்த இந்து மதப் பெயர்களைத் தூக்கி எறிந்துவிட்டு செந்தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொள்ளவும் முந்தையப் பாதையை மாற்றிக்கொள்ளவும் துணிந்து முன்வந்து திரண்டு நின்ற பண்பு மாற்றம் என்பது வரலாற்றைத் தம்பக்கம் வளைக்கும் ஆற்றல் பெற்ற வெற்றியாளர்களால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய சாதனையாகும்.
அந்த வரலாற்றாளர்களுள் ஒருவராகத் தமிழியத் திறலேற்றுக்கொண்ட திருமா திகழ்கிறார். மேற்பரப்பில் ஒரு எளிய செயல்பாடாகத், தெரியக்கூடிய இந்தத் தமிழியக்கம், வேர்ப்பரப்பில் ஆற்றியுள்ள வினைகளும் எதிர்வினைகளும் பார்ப்பனியத்தளத்தில் அதிர்வுகளையும், தலித்தியத் தளத்தில் உணர்வுகளையும் தமிழியத்தளத்தில் கனவுகளையும் கிளர்த்தியுள்ளன.
தமிழில் பெயர்மாற்றம் என்பது மும்முனைப் போராக வடிவம் பெற்றது.
1. இந்து மதப் பெயர்களை மதச்சார்பற்ற பெயர்களாக மாற்றியதால் அது பார்ப்பனிய எதிர்ப்புப் போராயிற்று,
2. சமக்கிருதப் பெயர்களை நீக்கியதால் வடமொழி எதிர்ப்புப் போராயிற்று,
3. அது தமிழ்த்தேசிய உள்ளீடு கொண்டிருப்பதால் இந்தியத் தேசிய எதிர்ப்புப் போராயிற்று,
ஒரு ஒற்றைச் செயல்பாட்டால் மூன்று களங்களில் மூன்று போர்களை எதிர்கொண்ட ஆற்றலை சிறுத்தைகள் இயக்கம் தலித்துகளுக்குத் தந்தது.
பார்ப்பனியத்தின் அறிவுப்புலம் வடமொழியே, ஆயினும் அதன் செயற்களம் இந்தி மொழிதான். எனவே,
பார்ப்பனியத்தின் அறிவுப்புலம் வடமொழியே, ஆயினும் அதன் செயற்களம் இந்தி மொழிதான். எனவே,
தேசியத் தளத்தில் - இந்தித் தேசியமே இந்தியத் தேசியம்
பொருளியல் தளத்தில் - பெருமுதலாளியமே இந்தியத் தேசியம்
பண்பாட்டுத் தளத்தில் - பார்ப்பனியமே இந்தியத் தேசியம்
இந்தத் திரிசூல முனைகளில்தான் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் நசுக்கப்பட்டு வருகின்றன.
பொருளியல் தளத்தில் - பெருமுதலாளியமே இந்தியத் தேசியம்
பண்பாட்டுத் தளத்தில் - பார்ப்பனியமே இந்தியத் தேசியம்
இந்தத் திரிசூல முனைகளில்தான் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் நசுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்திந்தியக் கட்சிகளுக்குள்ள பிறவி நோய் ‘ஏக இந்தியம்’ என்பதாகும். அதனால் அவை இந்திய தேசியத்தைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்; தமிழ்த் தேசியத்தை மூளையை முடிக்கொண்டு எதிர்க்கும்.
பார்ப்பனியத்தை எதிர்த்துப் போரிடும் தமிழியச் செயல்பாட்டிலும் இந்தியத்தை எதிர்த்து நிற்கும் தமிழினச் செயல்பாட்டிலும் விடுதலைச்சிறுத்தைகள் இறங்கியபோது அவர்களுக்குள் களப்போரில் தோள்கொடுக்க யாருமில்லை
சமயப் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களாக மாற்றும் எளிய போர் முறையில்கூடப் பார்ப்பனியத்தின் கொடிய வேர் முனைகள் எவ்வளவு ஆழத்துக்கு இறங்கியிருக்கின்றன என்பதைக் காணமுடிந்தது - காஞ்சி ஜெயந்திரர் நேரடியாகவே களத்தில் இறங்கியபோது.
சேரிகளில் பரவிய தமிழிய எழுச்சி ஜெயேந்திர சங்கர பீடத்தை அதிரவைத்தது. ஜெயலலிதா ஆட்சி பீடம் பதறத் தொடங்கியது. பெயர் மாற்றம் என்பது இந்து மதத்திலிருந்து இடமாற்றம் என்றே ஜெயேந்திரர் நடுங்கினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கிளர்த்திய தமிழிய நெருக்கடியிலிருந்து தப்பிக்கவேண்டி, ‘தலித்துகளும் இந்துக்களே’ என்று ஒரு தற்காலிக விசா வழங்கி தலித்துகளைத் தம் மதத்துக்கு உள்ளே இழுக்க முயன்றார்.
அந்தச் சதியை முறியடித்தார் எழுச்சித்தமிழர், “நாங்கள் மதத்துக்குள் நுழைய அனுமதித்தால் போதுமா? மடத்துக்குள் நுழைய அனுமதி உண்டா? ஆலயத்தில் நுழைய அனுமதி உண்டா? அர்ச்சகராக அனுமதி உண்டா?” என்று சிறுத்தைகள் தலைவன் வீசிய கணைகளால் திணறிப் போனார் ‘காம’கோடி பீடாதிபதி.
இப்போது சற்றுத் திரும்பிப் பாருங்கள் தமிழியத்துக்காகத் தமிழியக்கங்கள் நடத்திய கருத்தியல் போருக்குத் துளியும் மசியாத பார்ப்பன மடமும், மேடமும் அதே கருத்தியல் போரை சிறுத்தைகள் தலித்தியப் போராக மாற்றிக் களப்படுத்தியபோது மிரண்டு போனார்கள். மிரண்டவர்கள் பார்ப்பனிய இந்தியர்கள் மட்டும் அல்லர், பார்ப்பனியத் தமிழ்த் தேசியர்களும்கூட.
***
விடுதலைச்சிறுத்தைகளுக்கு
- தமிழியமும் தலித்தியமும் இரண்டு கால்கள்.
- ஈழநாடும் தமிழ்நாடும் இரண்டு கண்கள்.
- உழவரும் தொழிலாளரும் இரண்டு கைகள்.
- மூளையாகச் செயல்படுவது தமிழர் இறையாண்மை.
- அதன் முதுகெலும்பாய் நிமிர்ந்து நிற்கும் தேசிய உரிமை
அங்கே வர்க்கப் போரும் வர்ணப்போரும் இணைந்து தேசிய இனப் போரில் சங்கமிக்கும். சுரண்டல் ஒழிப்பும் தீண்டாமை ஒழிப்புமே இனப்போரின் இறுதி இலக்காக இருக்கும்.
அயோத்திதாசரை உள்வாங்கிய அம்பேத்கரியமும், மார்க்சியத்தை உள்வாங்கிய பெரியாரியமும்தான் சிறுத்தைகளின் சமூக அடித்தளத்துக்கான தத்துவ அடித்தளம். இந்தச் சித்தரிப்பின் முழுவடிவம்தான் சிறுத்தைகள் கட்சி.
எனவேதான், சிறுத்தைகளின் அயலுறவுக் கொள்கை என்பது தமிழீழத்தை மையப்படுத்தியே இருக்கிறது. அதன் தேசியக் கொள்கை என்பது தமிழகத்தை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டிருக்கிறது.
எனவேதான், சிறுத்தைகளின் அயலுறவுக் கொள்கை என்பது தமிழீழத்தை மையப்படுத்தியே இருக்கிறது. அதன் தேசியக் கொள்கை என்பது தமிழகத்தை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தின் நடுவத்தில் நின்று தமிழகத்தும் தமிழீழத்துக்கும் இந்தியப் பேரரசு எப்படி எதிரியாகச் செயல்படுகிறது என்பதைத் தம் கன்னி உரையில் விளக்கி இந்தியத்தின் முகத்திரையைக் கிழித்துக்காட்டினார் திருமா. அது கண்டு உலகத் தமிழ்ப் பேரினமே உணர்வூட்டப்பட்ட செய்தியை நாம் பெற்றோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவர்களான தோழர் ஏ.கே. கோபாலனும் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் நாடாளுமன்றம் பற்றி ஒரு கருத்தை 1968ல் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தார்கள்.
“முதலாளித்துவ நாடாளுமன்றம் ஐயத்திற்கிடமின்றிச் சுரண்டும் வர்க்கக் கருவிதான்! அதன் உண்மை உருவத்தை எடுத்துக்காட்டி, அதற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் அடிப்படைக் கடமை. கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சுரண்டும் வர்க்கங்களை அம்பலப்படுத்தித் தோற்கடிக்கவேண்டும்” என்பதுதான் மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஏ.கே. கோபாலன், நம்பூதிரிபாட் கூட்டறிக்கையின் மையக்கருத்து.
முப்பதாண்டுகளுக்கு முன்னால் அவர்கள் கூறிய கருத்தை நாடாளுமன்றத்தில் செயல்படுத்திக் காட்டுகிறார். எழுச்சித் தமிழர் திருமாவளவன்! ஆதிக்கக் கோட்டைக்குள் ஏன் நுழைய வேண்டுமென்றால், அந்தக் கோட்டையின் ஆதிக்க வெறியை அம்பலப்படுத்துவதற்குத்தான். அதன் இந்திய ஆதிக்கம், இந்தி மொழி ஆதிக்கம், இந்துமத ஆதிக்கம், அவற்றின் மூலம் தமிழகத்துக்குள் நுழையும் ஏகபோக ஆதிக்கம், ஏகாதிபத்திய ஆதிக்கம், தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற அத்தனை ஆதிக்கங்களையும் எதிர்த்து முரசறையும் ஒற்றைக் குரலாகத் திருமாவின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து நான்கு திசைத் தமிழ்க்குடிக்கும் மகிழ்வளித்த போதுதான், மார்க்சிஸ்ட் தலைவர்களின் கூட்டறிக்கைக்கு ஒரு வடிவம் கிடைத்ததாக நான் கருதினேன்.
***
*நாடாளுமன்றத்தால் புரட்சி பூக்காது என்பதை நாடாளுமன்றத்திலேயே போட்டு உடை.
* அதிகாரம் பெறுவதை ஆயுதமாக்கிச் சர்வாதிகாரத்தைத் தகர்க்கப் போராடு.
*பார்ப்பனியத்தை எதிர்க்கும் போரில் தலித்தியத்தின் தலைமையை நிறுவு.
*இலங்கைக்குள் நுழைவது இலங்கை அரசின் முகமூடியைக் கிழிக்கவே என்பதை காட்டு.
*ஈழ எதிரிகள் மத்தியிலும் ஈழ விடுதலையை முன்னெடுக்கும் போர்க்குணத்தைக் கூட்டணி அரசியலிலும் கொடியேற்று.
*தமிழர் இறையாண்மை என்ற தேசியத் தன்னுரிமையைச் சமரசப்படுத்திக் கொள்ளாத சமர்க்களங்களாக மாநாடுகளை மாற்று.
மேற்காணும் ஆறு கட்டளைகளையும் தம் சிரம் மீது தாங்கிச் செயலாற்றி வருபவர் தாம் சிறுத்தைகளின் தலைவர் திருமா அவர்கள். மார்க்சிஸ்ட் தலைவர்கள் கூறிய போர் உத்தியைக் களப்படுத்திக் காட்டியவை மேற்படிக் கட்டளைகள் என்பதைச் சிறுத்தைகளின் நுண்ணரசியலைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள் நன்கு அறிவார்கள்.
மேற்காணும் ஆறு கட்டளைகளையும் தம் சிரம் மீது தாங்கிச் செயலாற்றி வருபவர் தாம் சிறுத்தைகளின் தலைவர் திருமா அவர்கள். மார்க்சிஸ்ட் தலைவர்கள் கூறிய போர் உத்தியைக் களப்படுத்திக் காட்டியவை மேற்படிக் கட்டளைகள் என்பதைச் சிறுத்தைகளின் நுண்ணரசியலைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள் நன்கு அறிவார்கள்.
மார்க்சியப் போர் உத்தியைப் படிக்காமலே தம் தேசியப் போர் உத்தியை வடித்தெடுத்த சுய சிந்தனை, மார்க்சியத்தோடு ஒத்துப்போகிற தற்செயல் தன்மையே திருமாவின் தனித்தன்மை அடிப்படையில் அவர் ஒரு இயங்கியல் சிந்தனையாளராக இயற்கையாகவே அமையப்பெற்ற இயல்பினால் தத்துவங்களின் மூலச்சிந்தனைகள் யாவும் அவரது மூளைச் சிந்தனைகளோடு ஒத்துக்போகிற உன்னதம் கைவரப்பெற்றவராயிருக்கிறார்.
மார்க்சின் இயங்கியல் சிந்தனையோடு ஜெர்மனியில் ஜார்ஜ் வீர்த் என்ற ஒரு செருப்புத் தொழிலாளியின் சுயமான தத்துவச் சிந்தனை ஒத்துப்போயிருந்ததைக் கண்டு வியந்து பாராட்டி அதைத் தம் நூலிலேயே (ழுநசஅயn னைநடிடடிபல) பதிவு செய்திருக்கிறார் மார்க்ஸ்.
***
அண்மைக் காலமாக எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ‘தமிழ்மண்’ இதழில் எழுதிவரும் தலையங்கங்கள் அவர்தம் சுயசிந்தனைக்குச் சான்றாக நிற்கின்றன.
அயோத்திதாசருக்குப் பின் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிற ஒரு அற்புதமான தமிழிய - தலித்தியச் சிந்தனையாளராக நான் திருமாவைக் காண்கிறேன்.
அந்தச் சிந்தனையின் ஒரு சிறு பொறியாக வெளிவந்திருக்கிறது விடுதலைச்சிறுத்தைகளின் 2011 தேர்தல் அறிக்கை.
அதைப் படித்துப் பாருங்கள், பிற அறிக்கைகளிடமிருந்து அது எப்படி வேறுபட்டுத் தன் தனித்தன்மையை - தமிழ்த் தன்மையை - தலித் தன்மையை - மெய்ப்பித்திருக்கிறது என்பதைக் காண்பீர்கள்.
இந்தத் தலைவனைப் பாதுகாத்து வளர்த்தெடுத்துத் தமிழினம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வரலாற்றின் வற்புறுத்தலைத் தமிழ் மக்கள் தம் இதயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
- தணிகைச்செல்வன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக