சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நலத்திட்டங்கள் வழங்கினார் தொல்.திருமாவளவன்!
3.2.2012, 4.2.2012 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிதம்பரம் தொகுதியில் பல நலத்திட்ட உதவிகளை செய்தார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாமை தொல்.திருமாவளவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். 3 ஆம் தேதி காலையில் அந்த முகாமை தொடங்கி வைத்தார். சிகிச்சை பெறுவதற்காக மக்கள் வந்து செல்ல ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் அமைந்துள்ள அனைத்து கிராமங்களுக்கும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த இலவச கண் மருத்துவ முகாமில் ஏராளமான கிராம மக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே கண்ணாடியும் வழங்கப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டியவர்கள் அரவிந்தர் கண் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த முகாமில் கலந்துக்கொண்ட மக்களுக்கு பரிசோதனை,சிகிச்சை, மருந்து, கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமை அரவிந்தர் கண் மருத்துவமனை மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் தாமரைச்செல்வன், திருமாறன் மற்றும் சேது ஆசிரியர் ஆகியோர் ஒருங்கினைத்திருந்தனர்.
சீதாலட்சுமி அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். அப்பள்ளியில் சத்துணவு ஒழுங்காக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தவர் மாணவர்களுடன் சேர்ந்து அங்கு வழங்கப்பட்ட சத்துணவை சாப்பிட்டார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு கட்டிட வசதிகள் செய்து தரும்படி கோரிக்கை வைத்தார். தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் உடனடியாக பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தருவதாக உறுதியளித்தார்.
பின்னர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் 7 வது வார்டில் மக்களை சந்தித்து நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். சமீபத்தில் உயிரிழந்த வெண்கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவரின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி மலர் அஞ்சலி செலுத்தினார்.
04.01.2012 ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் ஏற்பாடு செய்திருந்தது போல் பரதூர் பேரூராட்சியிலும் இலவச கண் சகிச்சை முகாமை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். காலையில் அந்த முகாமை தொடங்கிவைத்தவர் அங்கேயே இருந்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனே மாவட்ட ஆட்சியரிடமும், நிர்வாகத்தினரிடமும் தொலைபேசியில் பேசி மற்றும் கடிதங்கள் வழங்கியும் மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைத்தார்.
பின்னர் 2 மணியளவில் ஓரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்தார். மேலும் மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
வல்லம்படுகை இரயில்வே நிலையத்திற்கு அருகே இருக்கும் பெராம்பட்டு கிராமத்திற்கு செல்வதற்கு வழியே கிடையாது. இரயில் தண்டவாளத்தை கடந்துதான் செல்லவேண்டும். அப்படி தண்டவாளத்தை கடக்கும் போது காதுகேளாதவர் ஒருவர் இரயிலில் அடிபட்டு இறந்துவிட்டார். அவருடைய இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 உதவித் தொகை வழங்கினார். பின்னர் உடனடியாக இரயில் நிலையத்தில் இரயில்வே அதிகாரிகளை சந்தித்து பெராம்பட்டு ஊருக்கு தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் எனக் கூறினார். பின்னர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கொள்ளிடம் கரையோரத்தில் வீடு எரிந்த குடும்பத்திற்கு அரிசி, புடவை, வேட்டி , சட்டை ஆகிய உதவிகளை வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக