விடுதலைச்சிறுத்தைகள் கட்சிசட்டம் - விதிகள்
- இயக்க விவரம்
- இயக்கத்தின் குறிக்கோள்
- இயக்கத்தின் நோக்கங்கள்
- தலைமைச் செயலகம்
- பொதுப்பேரவை
- மையப்பேரவை
- மாநிலப் பொதுக்குழு
- மாநில செயற்குழு
- மாவட்டப் பொதுக்குழு
- மாவட்டச் செயற்குழுக்கள்
- வட்டார அமைப்புகள்
- அடிப்படை அமைப்புக் குழு
- அணிகள்
- மையங்கள்
- துணைநிலை அமைப்புகள்
- உறுப்பியம்
- உறுப்பினர் பதிவு
- உறுப்பினர் படிவம்
- உறுதிமொழி
- உறுப்பினர் கட்டணம்
- கட்டணப் பங்கீடு
- வருவாய்ப் பங்களிப்பு
- உறுப்பினர் உரிமைகள்
- உறுப்பினர் கடமைகள்
- உறுப்பினருக்கான இயக்கத்தின் பொறுப்பு
- உறுப்பினர் தகுதி இழப்பு
- பொறுப்பாளர் தகுதி
- முழுநேரப் பணியாளர்
- மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்
- இயக்கத் தேர்தல்
- பணிக் குழுக்கள்
- ஒழுங்கு நடவடிக்கை
- முதுபெரும் இயக்க உறுப்பினர்கள்
- துணைவிதிகள்
- திருத்தங்கள்
- முதல் திருத்தம் (2007 -2008)
அரசியமைப்புச் சட்டம் மற்றும் விதிகள்
உறுதிமொழி
இந்திய அரசியமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள சமத்துவம், சனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு உண்மையாகவும், நம்பிக்கையாகவும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்போமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதி அளிக்கிறது.
உறுப்பு எண் 1 - இயக்க விவரம்
இயக்கத்தின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை விளக்குவதாகும். சின்னம் என்பது கட்சியின் அடிப்படை முழக்கத்தைக் கொண்ட குறியீட்டைக் குறிக்கும்.
பிரிவு 1: பெயர்
இயக்கத்தின் பெயர் 'விடுதலைச் சிறுத்தைகள்' என்பதாகும். இயக்கம் என்பது 'கட்சி' என்றும் பொருள்படும்.
பிரிவு 2: சின்னம்
சீறும் சிறுத்தையை மையமாகக்கொண்டு, அதைச் சுற்றிலும் மேல்பாகத்தில் “சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை” என்றும், கீழ்ப்பாகத்தில் “விடுதலைச் சிறுத்தைகள்” என்றும் கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.
பிரிவு 3: கொடி
கட்சியின் கொடி நீலமும் சிவப்பும் கலந்த இருவண்ணங்களைக் கொண்டதாகும். கொடியின் மேல் பகுதியில் வானத்தின் நீல வண்ணமும், கீழ்ப்பகுதியில் குருதியின் சிவப்பு வண்ணமும், சம அளவுகளில் இருக்கும். கொடியின் மையத்தில் ஐந்து முனைகளையுடைய வெள்ளை விண்மீன் பொறிக்கப்பட்டிருக்கும். கொடி மூன்று பங்கு நீளமும் இரண்டு பங்கு அகலமும் கொண்ட அளவுகளில் இருக்கும்.
பிரிவு 4: கொடி விளக்கம்
நீல வண்ணம் - உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும்
சிவப்பு வண்ணம் - புரட்சிகர நடவடிக்கைகளைக் குறிக்கும்
விண்மீன் - விடியலை அடையாளப்படுத்தும் விடிவெள்ளியைக் குறிக்கும்.
விண்மீனின் ஐந்து முனைகள் - இயக்கத்தின் இலக்கை அடைவதற்கு கீழ்வரும் ஐவகை நோக்கங்களின் அடிப்டையில், கட்டமைக்கப்படும் போராட்டக் களங்களைக் குறிக்கும்.
1. சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.
2. வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.
3. மகளிர் விடுதலை வென்று மாண்பினைக் காப்போம்.
4. தேசிய இன உரிமைகள் மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.
5. வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமைகள் மீட்போம்.
உறுப்பு எண் 2 இயக்கத்தின் குறிக்கோள்
தமிழக மற்றும் இந்திய அளவில், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்றெடுப்பதே இயக்கத்தின் குறிக்கோளாகும்.
உறுப்பு எண் 3 இயக்கத்தின் நோக்கங்கள்
- புரட்சியாளர் அம்பேத்கர் வழியில், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாக்கி 'அரசியல் சக்தி' யாக வளர்த்தெடுப்பது.
- அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் தாழ்த்தப்பட்டோர் அல்லது சாதியற்றோர் தலைமையை நிறுவுவது.
- இந்திய தேசியம் என்னும் பெயரில் மொழிவழி தேசிய இனங்களின் மீது திணிக்கப்படும் ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடி, தேசிய இன உரிமைகளை நிலைநாட்டுவதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய அரசுகளையும், இந்திய அளவில் தேசிய இனங்களின் சனநாயக ஐக்கியக் குடியரசையும் நிறுவுவது.
- சாதி மற்றும் மதத்தின் பெயரால் உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்படும் தீண்டாமை உள்ளிட்ட இழிவுகள் மற்றும் வன்கொடுமைகளுக்கெதிராகப் போராடி, சாதி, மத ஒழிப்பை வென்றெடுப்பது.
- ஊழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரை அணி திரட்டி, சாதிய நிலவுடைமை மற்றும் முதலாளித்துவத்தின் அடிப்படையிலான வர்க்க ஒடுக்குமுறைகளையும் சுரண்டலையும் ஒழிப்பது.
- மகளிருக்கெதிரான ஆணாதிக்கம் உள்ளிட்ட அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் ஒழித்து, பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது.
- வல்லரசிய ஆதிக்கத்தையும், பன்னாட்டுப் பொருளாதாரச் சுரண்டலையும் ஒழித்து, இந்திய அளவில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குவது.
உறுப்பு எண் 4: தலைமைச் செயலகம்
கட்சியின் தலைமைச் செயலகம் சென்னை மாநகரத்தில் அமைந்திருக்கும், மாநிலங்களுக்கான தலைமைச் செயலகங்கள் அந்தந்த மாநிலங்களின் தலை நகரங்களில் அல்லது முகாமையான நகரங்களில் இயங்கும்.
உறுப்பு எண் 5: பொதுப்பேரவை
இயக்கத்தின் உச்சநிலை அதிகாரங்களைக் கொண்டப் இப்பேரவையானது, பொதுச் செயலாளரின் தலைமையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும். இடைப்பட்டக் காலங்களில் தேவையினடிப்படையில் பொதுச் செயலாளர் சிறப்புப் பொதுப்பேரவையைக் கூட்டலாம். அத்துடன், மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலோ அல்லது பொதுப் பேரவையின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதின் அடிப்படையிலோ சிறப்புப் பேரவையைக் கூட்டலாம்.
இன்னும் வரும்.....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக