சத்தியமூர்த்தி பவன் தாக்குதல் சம்பவம்

28.12.08 - குமுமதம் ரிப்போர்ட்டர்

ங்களைக் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுதும் போராடுகிறார்கள். அதற்கு சத்தியமூர்த்தி பவனை நீங்கள் ஆள் அனுப்பித் தாக்கியதுதான் காரணம் என்கிறார்களே?


``அவர்கள் தமிழகம் முழுதும் போராடுகிறார்கள் என்பது தவறு. நான் ஆள் அனுப்பினேன் என்பதும் அபத்தம். காங்கிரஸாருக்கு அல்ல. அதிலுள்ள சிலருக்கு. என் மீது கோபம் என்பதைவிட தி.மு.க. அரசு மீதுதான் கோபம். தி.மு.க. மீது உள்ள கோபத்தை என்னைப் பகடைக்காயாக்கி ஊதிப்பெரிதாக்குகிறார்கள். தலைவர் தங்கபாலுவும், இளங்கோவனும்தான் அப்படிச் செய்கிறார்கள். உண்மை அறிந்த காங்கிரஸார் வழக்கம் போலவே இருக்கிறார்கள்.''


சத்தியமூர்த்திபவனை விடுதலைச் சிறுத்தைகள் தாக்கவில்லை என்கிறீர்களா?

``நடந்ததைக் கூறுகிறேன். 20-ம் தேதியன்று பெரியார் தி.க.வினர் உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தில் இறங்கினார்கள். அதை எதிர்த்து காங்கிரஸாரும் மறியல் செய்தார்கள். அங்கே பதற்றமான நிலை. அப்போது சத்தியமூர்த்தி பவனுக்கு சற்றுத் தள்ளி விடுதலைச் சிறுத்தைகளின் தொழிலாளர் அணி பெயர்ப்பலகை இருந்தது. காங்கிரஸார் அதை உடைத்து சேதப்படுத்தியதோடு, என் பெயரைச் சொல்லி மிகத் தரம் தாழ்ந்த வார்த்தைகளில் ஏசினார்கள். அங்கிருந்த எமது கட்சித் தொழிலாளர் உறுப்பினர்கள் தட்டிக் கேட்கவே, அங்கே தள்ளு முள்ளு, கைகலப்பு என நடந்துவிட்டது. இது எதிர்பாராமல் நடந்ததே ஒழிய, ஆள் அனுப்பி நடந்ததில்லை.

சம்பவம் நடந்து என் கவனத்திற்கு வந்த நிமிடமே நான் தங்கபாலு, இளங்கோவன், சுதர்சனம், ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோரிடம் நடந்த உண்மையை விளக்கிக் கூறினேன். இதில் ப.சிதம்பரம் மட்டும் `தலைவர் தங்கபாலுவிடமே கூறுங்கள். நான் வேலையாக இருக்கிறேன்' என்றார். மற்றவர்கள் புரிந்துகொண்டார்கள். தங்கபாலுவும், இளங்கோவனும் மட்டுமே இதை ஊதிப் பெரிதுபடுத்துகிறார்கள். சத்தியமூர்த்திபவனுக்குள் பெருந்தலைவர் மூப்பனாருடன் கைகோத்துத்தான் நான் அரசியலுக்குள் கால் பதித்தேன். அப்படிப்பட்ட இடத்தில் தாக்குதல் நடத்தும் அளவிற்கு நான் நன்றி மறந்தவன் அல்ல.''

நீங்கள் மறைந்த தலைவர் ராஜீவ்காந்தி படுகொலையை கொச்சைப்படுத்திப் பேசி வருவது சரியா? அதுதானே அவர்களை வருத்தமடைய வைக்கிறது?

``மறைந்த தலைவர் ராஜீவ்காந்தி மரணத்தை ஒருபோதும் நான் சிறுமைப்படுத்தியதில்லை. அப்படிப் பேசவும் மாட்டேன். ஆனால் அப்படித் திரித்துக் கூறி பிரசாரம் செய்கிறார்கள். தங்கபாலுவுக்கும், இளங்கோவனுக்கும் உண்மையிலேயே ராஜீவ்காந்தி மீது அக்கறை இருக்கிறதா? ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி `ராஜீவ் கொலைக்குக் காரணமே சோனியாதான். அவரை விசாரிக்க வேண்டும். அது நடந்தே தீரும்' என்று புத்தகம் எழுதிப் பறைசாற்றுகிறார். அது உண்மையா? சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக அந்த இருவரும் கொதித்தெழுந்து போராடினார்களா? தன் கட்சித் தலைவரை ஒருவர் கொச்சைப்படுத்துவதை வேடிக்கை பார்த்தவர்கள்தானே!

மேலும், ராஜீவ்காந்தி மீது உண்மையாகவே அக்கறை இருந்தால் `பல்நோக்கு புலன் விசாரணைக் குழு' அமைக்கப்பட்டு இத்தனை ஆண்டு காலமும் செயல்படாமல் முடங்கி உள்ளதை செயல்படுத்தக் குரல் எழுப்பினார்களா? ஏன் முன்வரவில்லை? ராஜீவ் கொலையின் `உண்மை' வெளிவந்திருக்குமல்லவா. அக்கறையில்லாதது ஏன்? ஜெயின் கமிஷனே சுப்ரமணியன் சுவாமி, சந்திராசுவாமி பற்றி `விசாரிக்கப்பட வேண்டியவர்கள்!' என்று கூறிய பிறகும் ஒரு முறையாவது இப்படி கொதித்து அவர்களின் உருவ பொம்மையைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா?

தங்கபாலு அவர்களும் இளங்கோவன் அவர்களும் `அன்னை'க்கு ஆதரவாக இல்லை. அன்னையின் தலைமையை ஏற்று வழிநடக்கவில்லை. அ.தி.மு.க. `அம்மா' விற்கு ஆதரவாக இருக்கிறார்கள். `அம்மா'வின் தலைமையேற்று, தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுக்கவே என்னைக் களங்கப்படுத்துகிறார்கள்!'' என்றார் தொல்.திருமாவளவன்.

ஸீ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக