விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை 2010. தலைமைக்குழு ஆய்வு.


விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை 2010.
தலைமைக்குழு ஆய்வு.

எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 29-05-2010 அன்று சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள விஜயா பார்க் அரங்கத்தில் நடைப்பெற்றது. காலையில் தொடங்கிய தலைமைக்குழு ஆய்வில் தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை பற்றிய தகவல்களை ஆவணங்களாக தலைமைக்குழுவிடம் சமர்பித்தனர்.
பின்னர் மாலை சுமார் 4 மணி அளவில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை 2010 பற்றியும்,மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும்,கருத்துக்களையும் வழங்கி ஆற்றிய நீண்ட நெடிய உரையிலிருந்து........

தமிழக அரசியலில் குறுகிய காலத்தில் தனி முத்திரை பதித்து, கடந்த பத்தாண்டுகளில் கணிசமான வெற்றியை பெற்றிருக்கும் அரசியல் கட்சி நம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியாகும்.அதற்கு சான்றாக தமிழக சட்டசபையிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

எழுச்சி என்பது வேறு வளர்ச்சி என்பது வேறு நம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எழுச்சியோடு உள்ளது.மேலும் வளர்ச்சியை மேம்படுத்தவேண்டுமென்றால் கட்சியின் கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

நம்மை நாம் சுய விமர்சனம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது. பொது மக்களிடையே எத்தகைய நன்மதிப்பை பெற்றிருகிறோம் என்றுநாம் சுயவிமர்சனம் செய்துக்கொள்ளவேண்டும். தமிழக மக்களிடம் நம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு நன்மதிப்பு உள்ளதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்த தீவிர உறுப்பினர் சேர்க்கை 2010 வெற்றியடைந்துள்ளது.  தீவிர உறுப்பினர் என்பவர் நம் கட்சியின்கொள்கை கோட்பாடுகளை கேட்டறிந்து,நம் மேல் நம்பிக்கை வைத்துஆயுள் காலம் முழுவதும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராய் இருப்பேன் என வருபவர் தான் தீவிர உறுப்பினர்.

தீவிர உறுப்பினர் என்பவர் சந்தா செலுத்துபவர்,கட்சிக்கு நிதி செலுத்துபவர்,கட்சி நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றவர்.  இந்த வகையில் நாம் தமிழகம் முழுக்க சேர்த்திருக்கும் இந்த தீவிர உறுப்பினர் சேர்க்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அரசியல் களத்திற்கு பெரும் உறுதுணையாய் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

கட்சி நிர்வாகிகள் தலைமைப்பண்புகளுடன் செயல்பட வேண்டும்.கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு, கட்டமைப்புக்கு உட்பட்டு செயல்படத்தெரிந்தவர்கள் தான் தலைமைப்பண்புக்கு உரியவராக முடியும். சமூக அக்கறையுள்ள சமூகக்குழுவாகத்தான் முதலில் நாம் தோன்றினோம்.ஆனால், நாம் தற்போது தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக உருவெடுத்திருக்கிறோம்.இந்த வளர்ச்சியைவளுப்படுத்த மறு சீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்


"அமைப்பாய் திரளவும்" 

"அங்கீகாரம் பெறவும்"

"அதிகாரம் செலுத்தவும்"

கட்சியின் கட்டமைப்பு பனிகளை மேம்படுத்தி மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது நம் அனைவருக்குமான அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதுதான் இந்த தீவிர உறுப்பினர் சேர்க்கை 2010 தீவிர உறுப்பினர் சேர்க்கை 2010ல் மகளிர்களை அதிக அளவில் உறுப்பினராய் சேருங்கள்.மற்றும் வண்ணார்களையும், நரிக்குறவர்களையும், அரவாணிகளையும் பெருவாரியாக உறுப்பினராய் சேர்த்து விடுதலைச்சிறுத்தைக்கட்சிக்கும் சமூகத்திற்க்குமான உறவு மேம்பட வாய்ப்பை உருவாக்குங்கள்.

அதிகார மையத்தை நோக்கிய பயணம்  மகளிர் விடுதலைப்பெற்று அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் இந்த தீவிர உறுப்பினர் சேர்க்கை. 


நாம் குறித்த இலக்கை அடையாமல் ஓயக்கூடாது. 

2 கருத்துகள்:

ungalin unnadha muyarchikku kidakum nichaya vetri.

payirgalai valarlu neengal
thangal arugil ulla kalaigalai ver arukkavum vaazhthigirom

3 ஜூன், 2010 அன்று 8:57 AM comment-delete

surely 2011 will be our year.
R.Elayamani

3 ஜூன், 2010 அன்று 9:55 PM comment-delete

கருத்துரையிடுக