2000க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கைது


சிங்கள இனவெறியன் இராஜபக்சே வருகையைக் கண்டித்து
சிறுத்தைகள்  கண்டன ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் உள்பட 2000 க்கும் 
மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள்
தமிழகம் முழுவதும் கைது

சிங்கள இனவெறியன் இராஜபக்சே டெல்லி வருகையைக் கண்டித்து இன்று (08-06-2010) காலை 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, நினைவு அரங்கம் முன் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ""திரும்பிப் போ! திரும்பிப் போ! கொலைவெறியன் இராஜபக்சேவே திரும்பிப் போ! சிங்கள இனவெறியன் இராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?'' போன்ற முழக்கங்களை தலைவர் தொல். திருமாவளவன் எழுப்ப, கூடியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் விண்ணதிர முழங்கினர்.



பின்னர் திருமாவளவன் பேசியதாவது

""இலட்சக் கணக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறியன் இராஜபக்சே இன்று புதுதில்லி வருகிறார். முள்ளி வாய்க்கால் பேரவலம் முடிந்து ஓராண்டாகியும் இலட்சக்கணக்கான தமிழர்கள் வதைமுகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அம்மக்களுக்கு எந்தவிதத் தீர்வுத் திட்டத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை. அவர்கள் இன்னும் மீள்குடியமர்த்தம் செய்யப்படவில்லை.

உடனடியாக ஈழத் தமிழர்களை அவரவர் வாழிடங்களில் குடியமர்த்தம் செய்ய வேண்டும். இந்தியŠசிங்கள ஆட்சியாளர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் உள்ளடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். இக்கோரிக்கைளை வலியுறுத்தி இன்று இவ்வார்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மனு அளிக்கப்படும்.'' இவ்வாறு பேசினார்.
காவல்துறை அனுமதி தராததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் வழக்கறிஞர் வீரமுத்து, கபிலன், ந.இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் கா. கலைக்கோட்டுதயம், மாநில நிர்வாகிகள் வன்னி அரசு, மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், இரா.செல்வம், ஆர்வலன், எழில் கரோலின் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இவண்

(தொல். திருமாவளவன்)

1 கருத்துகள்:

விடுதலைச் சிறுத்தைகள் அல்ல என் தலைவர் தொல். திருமாவளவன்.
விடுதலைச் சிங்கம் என் தலைவர் தொல். திருமாவளவன்.
HMT.ANSARI DUBAI.

8 ஜூன், 2010 அன்று 4:47 AM comment-delete

கருத்துரையிடுக