தேர்தல் பணிக்குழு பட்டியல் & பணிகள்



விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
உள்ளாட்சி மன்றத் தேர்தல் – 2011
தேர்தல் பணிக்குழுவின் பணிகள்
•2011 – உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நமது கட்சி தனித்து போட்டியிடுகிறது. இத்தேர்தலில் அரசியல் புரிதல், தகுதி, உறுதிப்பாடு, வலிமை போன்ற பன்முகத்தன்மையுடைய வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும்.
• இவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டியவர்களுக்குள் கடும் போட்டி நிலவினால் மனுதாரர்களை ஒற்றுமைப்படுத்தி கருத்தேற்றம் செய்து தேவையேற்படின் தலைமையிடம் ஆலோசனை பெற்று மாவட்டக்குழுவே ஒருவரை அறிவிக்க வேண்டும்.
•இவ்வாறு கருத்தேற்றம் செய்து போட்டியிட விரும்புகிறவரை வேறு பொறுப்புக்கு அறிவிக்கலாம்.
•அனைத்து பொறுப்புகளுக்கும் தெரிவு செய்யப்படுகிற வேட்பாளர்களைப் பட்டியலிட்டு அறிவித்த பின் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஆலோசனை வழங்க வேண்டும்.
•வேட்பாளரின் வலிமையறிந்து நிதித் தேவைகள் குறித்து முன்கூட்டியே முழுமையாகத் திட்டமிட்டு ஆலோசனை வழங்கி தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
• போட்டியிடுகிற இடங்களின் பகுதிச்சூழல், அரசியல் சூழல் ஆகிவற்றுக்கேற்ப தேவையேற்படின் அரசியல் அனுசரணைக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
•அந்தந்தப் பகுதியில் நமது கட்சி சார்பில் விண்ணப்பிக்காத இடங்களைக் கண்டறிந்து அவ்விடங்களுக்கு அப்பகுதியிலுள்ள தகுதியிலுள்ள நமது உறுப்பினர்களைக் கண்டறிந்து வேட்புமனுச் செய்யச் செய்ய வேண்டும்.
• அனைத்து பொறுப்புகளுக்கும் பெண்கள் ஃ சிறுபான்மையோர் ஃ விளிம்பு நிலைச் சாதியினர் என அனைவரது பிரதிநிதித்துவமும் இடம்பெறும் வகையில் அறிவிக்க வேண்டும்.
•ஒருங்கிணைந்த மாவட்டத்தை (மாநகர் – புறநகர்) ஒரே அலகாகக் கொண்டு பொறுப்பாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
•தேர்தல் பணிக்குழுவினர் தேர்தல் முடியம் வரை அவ்வப்பகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும்.
• மாநகர் மன்றத் தலைவர் தொடங்கி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வரையிலான அனைத்து பொறுப்புகளுக்கும் தெரிவு செய்து அறிவிக்கப்பட்டவர்களின் பட்டியலை காலத்தில் தலைமைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
குறிப்பு: தலைமையில் ஒப்படைக்காத விருப்ப மனுக்களை தேர்தல் பணிக்குழுவினரே பெற்று பட்டியலிட்டு (விருப்ப மனு மற்றும் வரைவோலை) மாவட்டத் தலைமையில் வைத்து அறிவித்த பின்னர் மாநிலத் தலைமையில் ஒப்படைக்க வேண்டப்படுகிறது.
இவண்,
தலைமை தேர்தல் பணிக்குழு,
(உஞ்சை அரசன், ஏ.சி.பாவரசு)

***


0 கருத்துகள்:

கருத்துரையிடுக