பரமக்குடி கலவரம் சி.பி.ஐ. விசாரணை தேவை : கண்டன ஆர்பாட்டத்தில் திருமா

பரமக்குடி படுகொலைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  பரமக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட தாக்குதல் சம்பவம். ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணையில் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு 10 லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு காரணமான போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்கள் பயம் இல்லாமல், பாதுகாப்புடன் வாழ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை, அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார். இந்நிகழ்வில் பேரா.சுபவீ, விடுதலை ராஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார், வன்னியரசு, உஞ்சையரசன், எஸ்.எஸ்.பாலாஜி, வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருமாவின் கண்டன உரை காணொளியாக 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக