"பரமக்குடி தலித் படுகொலைகள்" கருத்தரங்ம்

விடுதலைச்சிறுத்தைகள் தமிழ்தேசியத்தை ஆதரிப்பதற்கு சாதி ஒழிப்பு அரசியல் தான் முதன்மையானது சில பேர் ஏதோ மொழி உணர்விலே ஆதரிக்கிறார்களே அப்படி நாங்கள் ஆதரிக்கவில்லை. நாங்கள் பேசுகிற தமிழ்தேசியம் சாதி ஒழிப்பில் இருந்து பார்க்கிற தமிழ்தேசியம்.மேதகு பிரபாகரனை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொன்னால் நாங்கள் நினைத்ததை செய்ய முடியவில்லை என்கிற ஆற்றாமையில் இருந்து அல்லது ஒரு ஹீரோவாக பார்த்து ஆதரிக்கவில்லை.என்னால் துப்பாக்கி தூக்க முடியவில்லையே ஆனால் அண்ணன் துப்பாக்கி தூக்குகிறார், என்னால் படையை கட்ட முடியவில்லையே ஆனால் அண்ணன் படையை கட்டுகிறார், எங்களால் இராணுவத்தோடு மோத முடியவில்லையே ஆனால் அண்ணன் இராணுவத்தோடு மோதுகிறார் என்று இயலாதவன் தன்னுடைய இயலாமையால் ஆற்றாமையால், தன்னை போல் இன்னொருவன் தான் விரும்புவதையெல்லாம் செய்கிறான் என்று கதாநாயகன் மீது ஒரு மோகம் கொள்கிறான் அல்லவா சினிமாவில். ஒருவனை கூட அடிக்க முடியாதவன் பத்து பேரை ஒருத்தன் அடிக்கும் போது அவன் மீது ஒரு மோகம் வருகிறது.தன்னுடைய எதிரியை தாக்க முடியாதவன் இன்னொருவன் கதாநாயகனாக எதிரிகளை தாக்குகிறான், அதனால் கதாநாயகன் மீது ஒரு மோகம் வருகிறது. அப்படி தான் தமிழ்நாட்டில் சாதி இந்துகளுக்கு பிரபாகரன் மீது ஏராளமான மோகம்.ஆனால் நாங்கள் மேதகு பிரபாகரனை எப்படி பார்கிறோமென்றால் அரச பயங்கரத்தை எதிர்க்கிற ஒரு புரட்சியாளர், தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிற ஒரு விடுதலை போராளி, அந்த அடிப்படையில் தான் மேதகு பிரபாகரனை அவர்களை அண்ணனாக ஏற்று கொண்டு,அந்த அடிப்படையில் தான் மேதகு பிரபாகரனை அவர்களை ஆதரிக்கிறோம்.ஒடுக்குமுறை எங்கே நடந்தாலும் அதை எதிர்கிறவன் தான் மனித உணர்வு உள்ளவன், மனிதநேயம் மிக்கவன்.தீவைப்பு எந்த வடிவில் நிகழ்ந்தாலும், எங்கே நிகழ்ந்தாலும் ,எளியவர்கள் பாதிக்கபட்டால் அதை கண்டிக்கிறவன் தான் மனிதநேயம் உள்ளவன்.படுகொலைகள் எங்கே நிகழ்ந்தாலும் அதில் உழைக்கிற மக்கள் பாதிக்கபட்டால்,அது உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அதை கண்டிக்கிறவன் தான் மனிதநேயம் உள்ளவன்,ஜனநாயக உணர்வுள்ளவன்.ஈழத்தில் நடந்தால் கண்டிப்போம் சேரியில் நடந்தால் கண்டிக்கமாட்டோம் என்று சொன்னால் அந்த உணர்வு எப்படி மனிதநேயம் உள்ள உணர்வாக இருக்கமுடியும்.தமிழர்கள் பாதிக்கபட்டால் நாங்கள் கொதிப்போம் தலித்துக்கள் பாதிக்கபட்டால் நாங்கள் மௌனிப்போம், என்பது எப்படி உண்மையான உணர்வாக இருக்க முடியும். அந்த (தமிழ் உணர்வு)உணர்வே உண்மையானதா என்கிற கேள்வி எழும். ............. "பரமக்குடி தலித் படுகொலைகள்" கருத்தரங்கில் எழுச்சித்தமிழர் மேன்மையாளர் உரை.24.09.2011.




-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக