உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு நிர்வாக திறன் மற்றும் ஆளுமை பயிற்சி !
2011 விடுதலைச் சிறுத்தைகளின் ஆண்டு என்னும் செயல் திட்டத்தில் ஒரு அங்கமாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு நிர்வாக திறன் மற்றும் ஆளுமை பயிற்சி இன்று (25.11.2011) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகளின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து உள்ளாட்சி பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்றனர்.
சென்னை இக்சா அரங்கத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாம் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமை தாங்கினார். கருத்தியல் பரப்புச் செயலாளர் கவுதம சன்னா சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சித் துரையின் முன்னாள் கூடுதல் இயக்குனர் தியாகராஜன், நகராட்சி நிர்வாக முனால் கூடுதல் இயக்குனர் சிவசாமி, எச்.ஆர்.எப் கிருஷ்ணவேணி, வழக்கறிஞர் எம்.எஸ்.நாதன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மனித உரிமை அமைப்பின் இயக்குனர் ஆசி பெர்னாண்டஸ் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த இரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக