பொதுக்குழு அழைப்பு &கட்சிப் பொறுப்புக்கான விண்ணப்ப படிவம்
கட்சியின் மறுசீரமைப்பையொட்டி அனைத்து நிலைகளிலும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பணிக்காலம் மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழுவைக் கூட்டுவது என்னும் அடிப்படையில் எதிர்வரும் 07.01.2012, சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னையில் கட்சியின் பொதுக்குழு கூடுகிறது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தை, தற்போதுள்ள நிலைக்கு மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகங்களாக கோட்ட அளவில் (சுனுழு) பிரிப்பதெனவும், அதனடிப்படையில் பிரிக்கப்படும் மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்பாளர்களையும், தலைமை நிர்வாகம் உள்ளிட்ட மாநில அளவிலான அனைத்து பொறுப்பாளர்களையும் நியமிப்பதென கடந்த 16.11.2011 அன்று சென்னையில் நடந்த மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தைப்போலவே புதுச்சேரியிலும் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. எனவே, வழக்கமாக பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் ஓன்றியம், நகரம், பகுதி உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
அத்துடன், இணைப்பில் கண்டவாறு பொறுப்புகளுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்துடன் பதிவுக்கட்டணத்திற்குரிய வரைவோலையையும் (னுனு) ‘நமது தமிழ்மண்’ இதழுக்கான வாழ்நாள் கட்டணத்திற்குரிய வரைவோலையையும் தவறாது இணைத்திட வேண்டும். ஏற்கனவே, ‘தமிழ் மண்’ இதழுக்குரிய வாழ்நாள் கட்டணம் செலுத்தியிருந்தால் மீண்டும் செலுத்திட தேவையில்லை.
பொறுப்பாளர்களுக்கான பதிவுக்கட்டண விவரம்
1 | தலைவர், பொதுச்செயலாளர்கள், பொருளாளர், | ரூ.10,000/- |
2 | தலைமை நிலையப் பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் (துணைநிலை அமைப்புகள்) | ரூ.5000/- |
3 | மாநில நிதிச் செயலாளர்கள், மாநில துணைச் செயலாளர்கள் | ரூ. 3000/- |
4 | மாவட்டச் செயலாளர்கள் (கட்சி), மாவட்ட பொருளாளர்கள் (கட்சி) | ரூ.2000/- |
5 | மாவட்ட துணைச்செயலாளர்கள் (கட்சி) மாவட்ட செய்தித் தொடர்பாளர்கள், துணைநிலை அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிதிச் செயலாளர்கள், மாவட்ட து.செயலாளர்கள் | ரூ.1000/- |

குறிப்பு :
- மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநிலச் செயலாளர்கள் இச்சுற்றிக்கையை உடன் நகலெடுத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
- பொறுப்புக்கான விண்ணப்பத்தை வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளத்தக்க வழிகாட்டுதலை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தமது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றினை இணைத்து அனுப்ப வேண்டும்.
- அடிப்படை உறுப்பினர் ஒவ்வொருவரும் எத்தகைய பொறுப்புக்கும் விண்ணப்பிக்கலாம்.
- பொதுக்குழு நடைபெறும் இடத்திலேயே விண்ணப்பத்தினை உரியகட்டணத்துடன் (பணமாக/DD-யாக) வழங்கலாம்.
- ஒன்றியம், நகரம், பகுதி, மாவட்டம் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் (கட்சி, துணைநிலை அமைப்புகள், அணிகள் மற்றும் மையங்கள்) அனைவரும் 2007 முதல் 2011- வரையிலான ‘பணி அறிக்கை’யினை அளிக்க வேண்டும்.
- நமது தமிழ்மண’; பொறுப்பாசிரியர், தாய்மண் வெளியீட்டகம் மற்றும் கரிசல் பதிப்பகப் பொறுப்பாளர்கள், பிடாரி பொறுப்பாசிரியர், தாய்மண் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் 2007 முதல் 2011-வரையிலான பணி அறிக்கையினை அளிக்க வேண்டும்.
நன்றி…….
இவண்,
(தொல்.திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக