தலைவர் திருமா - தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வி.சி.க சார்பில் நிவாரணம் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் பார்வையிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
கடலூர், சிதம்பரம் பகுதிகளில் தானே புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். புயலில் இறந்த 7 பேர் குடும்பத்தினரையும் சந்தித்து கட்சியின் சார்பில் தலா ரூ.10 ஆயிரம் நிதியை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கடலூர், விழுப்புரம் மாவடத்தில் பெருமளவு சேதம் ஆகியுள்ளது. ஆக முதல் கட்டமாக மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளார். புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் பார்வையிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக