சாந்தன் முருகன் தண்டனையைக் குறைக்கக் அடுத்தகட்ட போராட்ட வியூகங்கள் குறித்து மருத்துவர் இராமதாசு - திருமா சந்திப்பு
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் இராமதாசு அவர்களை நேற்று இரவு (30-08-2011) எழுச்சித்தமிழர் சந்தித்து பேரறிவாளன், சாந்தன் முருகன் தண்டனையைக் குறைக்கக் அடுத்தகட்ட போராட்ட வியூகங்கள் குறித்து விவாதித்தனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை விவகாரத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்காக பாமக நிறுவனர் ராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தைலாபுரம் தோட்டத்தில் கூட்டாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது ராமதாஸ் கூறியது:
தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வரவேற்று அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநரை சந்தித்து மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அவரது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமென ஆளுநரை முதல்வர் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.
தொல். திருமாவளவன் கூறியதாவது: தமிழக அரசின் இந்த தீர்மானத்தை வரவேற்று, பாராட்டி நன்றி தெரிவிக்கின்றோம். சென்னையில் நடைபெற உள்ள பேரணியில் இந்திய அளவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை அழைக்க உள்ளோம் என்று கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக