பரமகுடி படுகொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென ஆளுநரை சந்திதார் திருமா



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (14-௦9-2011) மாலை கவர்னரைச் சந்தித்தார்.  அப்போது பரமக்குடியில் காவல்துறையால் 7 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்யப் பரிந்துரைக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுக்களை கவர்னரிடம் கொடுத்தார்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் வன்னிஅரசு, சங்கத்தமிழன், இளம்சேகுவேரா, எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

-- வன்னிஅரசுமாநிலச் செய்திதொடர்பாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக