திருச்சியில் 6-1-2012 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 7-1-2012 அன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  2-1-2012 அன்று திருச்சியில் நடைபெற்ற முன்னணிப் பொறுப்பாளர்கள் சந்திப்பில் பொதுக்குழுவை எதிர்வரும் 6-1-2012 அன்று திருச்சியில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படும் இப்பொதுக்குழுவில் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் உட்பட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களையும் புதிதாக நியமனம் செய்வதற்குரிய செயல் திட்டங்கள் அறிவிக்கப்படும்.

அப்பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுக்குழு அரங்கிலேயே தரப்படும்.  விண்ணப்பம் செய்வதற்குக் கடைசி நாள் சனவரி 31, 2012 எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் மாநிலப் பொறுப்புகளுக்கு ரூ. 2000/-  மாவட்டடப் பொறுப்புகளுக்கு ரூ. 1000/-.  ஒன்றிய, நகரப் பொறுப்புகளுக்கு ரூ. 500/- எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இவண்
தொல்.திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக